Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Thiruvannamalai: police brutally beatsup Husband, Wife and Son in public

By   /  July 12, 2016  /  Comments Off on Thiruvannamalai: police brutally beatsup Husband, Wife and Son in public

    Print       Email

CONLN-SABHA--1M_CH_2929110fதி.மலை: நடுரோட்டில் கணவன், மனைவி, மகனை தாக்கி அராஜகம்: 3 போலீசார் டிரான்ஸ்பர்

திருவண்ணமலை மாவட்டம், செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா. அவரது மனைவி உஷா. மகன் சூர்யா, இவர்கள் 3 பேரும் புதன்கிழமை நடைபெற உள்ள உறவினர் திருமணத்திற்காக தங்க நகை வாங்குவதற்காக செங்கத்திற்கு திங்கள்கிழமை வந்துள்ளனர். செங்கம் போளுர் சாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள கடையில் நகை எடுத்துள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

ராஜாவிடம் இருந்த பணத்திற்கு கூடுதலாக நகையை உஷா தேர்வு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு வந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் கடைக்கு வெளியே வந்து சண்டை போட்டுள்ளனர்.

அப்போது அங்கு இருந்த செங்கம் நகர காவல்நிலையத்தின் தலைமைக் காவலர்கள் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் அந்த தம்பதிகளை நெருங்கி, எதற்கு சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். நாங்கள் இருவரும் கணவன் மனைவி, நகை எடுப்பதில் சண்டை வந்தது என்று கூறியுள்ளனர்.

புருஷன் பொண்டாட்டி சண்டையெல்லாம் வீட்டுக்குள்ள வச்சுங்க என போலீசார் சொன்னபோது, நான் பாத்துகிறேன் சார் நீங்க போங்க சார் என ராஜா கை நீட்டி பதில் சொல்லியுள்ளார். எங்களையே கை நீட்டி பேசுறீயா என கேட்டு நம்மாழ்வார் தன்னிடம் இருந்த லத்தியால் ராஜாவை அடிக்க, ராஜாவின் மகன் சூர்யா தடுக்க வந்துள்ளார். சூர்யாவை மப்டியில் இருந்த விஜயகுமார் இழுத்துப் பிடித்துக்கொண்டார். ராஜாவை நம்மாழ்வாரும், முருகனை சரமாரியாக அடித்து, உதைத்தனர். நடுரோட்டில் காவலர்கள் நடந்து கொண்ட விதத்தை அப்பகுதி சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியுடன் நின்று வேடிக்கை பார்த்தனர். தனது கணவரை அடிக்க வேண்டாம் என தலைமைக் காவலர் முருகனின் காலில் விழு, அவரை எட்டி உதைத்துவிட்டு ராஜாவை சரமாரியாக அப்போதும் அடித்தனர்.

திமிறிக்கொண்டு வந்த ராஜாவின் மகன் சூர்யாவையும் போலீசார் அடித்தனர். கணவரையும், மகனையும் அடிப்பதை பார்த்து உஷா கதறினார். ஒரு பெண் கதறியதை பொறுப்படுத்தாமல் சுமார் 20 நிமிடம் லத்தியால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும் தங்களது வெறிச்செயலை காட்டியுள்ளனர் போலீசார். போலீசாரின் இந்த வெறிச்செயலை அங்கிருந்த சில இளைஞர்கள் தடுக்கப் போக, அவர்களையும் விரட்டியுள்ளனர். நடுரோட்டில் இந்த பிரச்சனை நடந்ததால் இருபக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் செங்கம் போளுர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அடித்து முடித்த பின்னர், காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று காவல்துறையினரை அடிக்க முயற்சித்தார் என்று பொய்யான வழக்கு செய்ய ராஜாவையும், சூர்யாவையும் உட்கார வைத்தனர். இந்த தகவல் வாட்ஸ்அப் வீடியோ மூலம் பரவியது. இதையடுத்து சென்னை டிஜிபி அலுவலத்தில் இருந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னியிடம் கேள்வி எழுப்பினர். உடனடியாக பொன்னி செங்கம் காவல்நிலையத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்தார்.

பொன்னி விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, தோக்கவாடி கிராம மக்களும், செங்கம் நகர மக்களும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டவர்கள் அப்பாவிகளை தாக்கிய தலைமைக் காவலர்கள் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து காவலர்கள் 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →