மக்களவையில் ராகுல் காந்தி தூங்கினாரா? காங்கிரஸ் மறுப்பு
குஜராத் மாநிலம் உனாவில் தலித் இளைஞர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் – பாரதிய ஜனதா இடையே கடுமையான விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்குவது போன்ற காட்சி நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
முக்கியமான விவாதத்தின்போது ராகுல் தூங்குவதாக பிற கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியோ, மக்களவையில் ராகுல் காந்தி தூங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி கூறுகையில், “வெளியில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. மக்களவையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதால், உறுப்பினர்கள் சற்று ஓய்வு எடுப்பது இயல்பு. ஆனால் ராகுல் காந்தி கீழே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் தூங்கவில்லை. சபையில் அமளி ஏற்பட்டு கடும் கூச்சலுக்கு இடையில் எப்படி ஒருவரால் தூங்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி தனது அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்ததாக மற்றொரு காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவையில் ராகுல் காந்தி தூங்கியதாக சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.