அவதூறு வழக்கில் ஆஜராகாததால் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தே.மு.தி.க. சார்பில் கடந்த 6-11-2015 அன்று பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழக முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதுபற்றி தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியன் என்பவர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 24-3-2016 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் , பிரேமலதா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பில் வக்கீல் ரகுபதி ஆஜரானார்.
இதன்பின்பு இந்த வழக்கு விசாரணை 25-4-2016 மற்றும் 27-6-2016 ஆகிய தேதிகளில் நடந்தது. இதிலும் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் ஆஜராகவில்லை. வக்கீல் ரகுபதி மட்டுமே ஆஜராகி மனு கொடுத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் வக்கீல் ரகுபதி ஆகியோர் ஆஜராகவில்லை.
இதைதொடர்ந்து நீதிபதி அலமேலு நடராஜன், விசாரணைக்கு வராத விஜயகாந்த், பிரேமலதா ஆகியோருக்கு ‘‘பிடிவாரண்டு’’ பிறப்பித்து உத்தரவிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.