Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

TN Assmbly session starts June 3rd.  Dhanapal will be the Speaker.

By   /  June 2, 2016  /  Comments Off on TN Assmbly session starts June 3rd.  Dhanapal will be the Speaker.

    Print       Email

201606021115424350_Dhanapal-and-Jayaraman-filed-nominations-for-Speaker-and_SECVPFதமிழ்நாடு சட்டசபை நாளை கூடுகிறது; சபாநாயகராக தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வாகிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் சட்டசபையில் 25-ந் தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து ஜூன் 3-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவித்தார்.

InCorpTaxAct
Suvidha

போட்டியிட விரும்புவோர் இதற்கான வேட்பு மனுவை சட்டசபை செயலாளரிடம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஜூன் 2-ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், இதுசம்பந்தமாக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கு ப.தனபாலையும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனையும் வேட்பாளர்களாக ஆளும் கட்சியான அ.தி.மு.க. அறிவித்தது. அவர்கள் இருவரும் இன்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நாளை (3-ந்தேதி) காலை 10 மணிக்கு சட்டசபை கூடும்போது சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்காக எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவிப்பார். ஒரு பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்திருந்தால் தேர்தல் நடத்தப்படும்.

இன்று மதியம் வரை அ.தி.மு.க. தவிர வேறு எந்த கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

குடும்பத்துடன் மலேசியா சென்றிருந்த எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னை திரும்பிவிட்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →