Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

TN Budget: Political party leaders, opinion

By   /  July 22, 2016  /  Comments Off on TN Budget: Political party leaders, opinion

    Print       Email

201607220815197525_Tamil-Nadu-budget-political-party-leaders-opposition_SECVPFதமிழக பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பும், எதிர்ப்பும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

InCorpTaxAct
Suvidha

தமிழக அரசின் நிர்வாகத்திறன் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மோசமான நிர்வாகம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுத்துவிட்டு, புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறுவது ஏமாற்று வேலை ஆகும். தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 2015-16-ம் ஆண்டில் எந்த ஒரு துறையிலும் வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட முடியவில்லை.

தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பிலான ரூ.1.64 லட்சம் கோடியில் ஊதியம், ஓய்வூதியம், மானியம், கடனுக்கான வட்டி ஆகியவற்றிற்காக செலவு செய்யப்படும் தொகை மட்டும் ரூ.1,54,536 கோடி ஆகும். ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், விரைவில் கடனிலும் தமிழகம் முதலிடம் பிடிக்கும். அந்த வகையில் தமிழகத்தை மீள முடியாத கடன் சுமையில் தள்ளியது மட்டுமே ஜெயலலிதா அரசின் சாதனையாக இருக்கும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக நிதிநிலை திருத்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருப்பது ஒருபுறம் வரவேற்பதாக இருப்பினும், ஒருபுறம் பற்றாக்குறை பட்ஜெட்டாகவே கருதப்படுகிறது. தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

கவர்ச்சி திட்டங்களுக்கும், இலவச திட்டங்களுக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 110 விதியின் கீழ் சென்ற முறை அறிவித்த திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

அதேபோல இந்த முறையும் அறிவிப்பு அரசாக மட்டும் இல்லாமல், செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும். ஏட்டுச்சுரக்காய் கூட்டுக்கு உதவாது. அதுபோல இந்த திட்டங்கள் ஏட்டளவில் மட்டும் இல்லாமல், செயல் அளவில் இருக்க வேண்டும். வரி இல்லாத பட்ஜெட் என்று பெருமை பேசினாலும் பற்றாக்குறை என்ற வலியுள்ள பட்ஜெட்டாகவே கருதப்படுகிறது.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடனில் மூழ்கி தத்தளிக்கின்ற தமிழக அரசு இதிலிருந்து மீள்வதற்கு பட்ஜெட்டில் வழிவகை கூறப்படவில்லை. தமிழகத்தில் படிபடியாக மதுவிலக்கு என்று அறிவித்திருந்த முதல்-அமைச்சர், அதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. மாணவர்களின் கல்வி கடனை அரசே ஏற்கும் என்று தேர்தல் நேரத்தில் முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் வழக்கமான சடங்கு போல தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்த பின்னணியில் விலைவாசியை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.

வறுமையை ஒழித்திட பொருத்தமான திட்டங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை. சட்டம்-ஒழுங்கை சரி செய்ய பட்ஜெட்டில் சரியான திட்டம் இல்லை. உரிய உத்தரவாதமும் தரப்படவில்லை.

தாது மணல், கிரானைட், ஆற்று மணல் போன்ற இயற்கை வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தி, இவைகளை அரசே ஏற்று நடத்தி வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திட பட்ஜெட்டில் உருப்படியான எந்த அறிவிப்பும் இல்லை.

மொத்தத்தில் நவீன தாராளமய பொருளாதார கொள்கையை மாநிலத்தில் அமலாக்கிடும் அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பாதகமானதாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →