Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

TN Govt can release us – says Rajiv’s victim Nalini

By   /  February 24, 2016  /  Comments Off on TN Govt can release us – says Rajiv’s victim Nalini

    Print       Email

5e1d4abd-1848-474e-a911-4d167e2150f9_S_secvpfகருணை அடிப்படையில் தமிழக அரசு எங்களை விடுதலை செய்யவேண்டும்- நளினி பேட்டி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது தந்தை சங்கரநாராயணன் (வயது 92), நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகில் உள்ள அம்பலவாணபுரத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று 12 மணி நேரம் பரோலில் செல்வதற்கு நளினிக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நளினியை இன்று கோட்டூர்புரம் அழைத்து வந்தனர். அவர் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கருணை அடிப்படையில் தங்களை தமிழக அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்தார்.

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து 25 வருடங்களாக சிறையில் இருக்கும் பெண் நானாகத் தான் இருப்பேன். தமிழக முதல்வர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்றும் நளினி கூறினார்.

’ராஜீவ்காந்தி கருப்பா, சிவப்பா? உயரமா, குள்ளமா? என்று கூட எங்கள் 7 பேருக்கும் தெரியாது.  நாங்கள் அப்பாவிகள்.  எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லாமலேயே 25 வருடங்களாக சிறையில் இருக்கிறோம். இதுதான் உண்மை.  நீங்கள் நம்பினால் நம்புங்கள். ராகுல் காந்தியும் எங்கள் மீது இரக்கம்வைத்து எங்களை விடுதலை செய்ய உதவ வேண்டும்” என்றும் சொன்னார்.

நானும் என் கணவரும் மற்ற 5 சகோதரர்களும் தமிழக அரசை நம்பியிருக்கிறோம்.  விடுதலை செய்வார்கள் என்ற நாளை எதிர்ப்பார்த்திருக்கிறோம்.

எனது மகளுக்கு இப்போது 24 வயது ஆகிறது.  அவளுக்கு திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.  அதற்கான விசயங்களில் ஈடுபட, இந்த நேரத்தில் கூட விடுதலையாக முடியவில்லை.  அவள் எந்த குற்றம் செய்தாள்’’ என்று முடித்துக்கொண்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →