Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

To conduct fair election EC should not hesitate to bring military – says Central Minister Pon Radha Krishnan

By   /  May 1, 2016  /  Comments Off on To conduct fair election EC should not hesitate to bring military – says Central Minister Pon Radha Krishnan

    Print       Email

24-1450955287-ponradhakrishnan-1021-600நேர்மையாகத் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் ராணுவத்தை அழைத்துவரவும் தயங்கக்கூடாது –மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்.

மார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

தேர்தல் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்படுகின்ற போது கூறுகின்ற தொகைக்கும் பின்னர் கூறப்படுகின்ற தொகைக்கும் அதிக அளவு வித்தியாசம் காணப்படுகிறது. இந்த உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களை அழைத்து செல்வதே சிறந்த வழி. தொலைகாட்சிகளில் நேரலை செய்வதற்கும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.

பணம் பறிமுதல் செய்யப்படுகின்ற அலுவலகங்களை தேர்தல் அதிகாரிகள் சீல் வைக்க வேண்டும். கடந்த முறை போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தப்பட்ட தாகவும், இந்த முறை ஆம்புலனஸ் வாகனம் மூலம் கடத்தப்படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வருவதோடு பணம் பறிமுதலும் செய்யப்பட்டு வருகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களை கட்சிகாரர்களாக காட்டிக்கொள்வதில பெருமைப்பட்டு கொள்கின்றனர். தமிழகத்தில் தேர்தல் உண்மையாகவும் நேர்மையாகவும் நடைபெறவேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் ராணுவத்தை வரவழைக்கவும் தயங்க கூடாது.

இந்தமுறை நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்பதில் மாற்றம் இல்லை. தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் எழுச்சியை காணமுடிகிறது. தேர்தல் முடிந்த பின்பு பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க தயங்கிய கட்சிகள் பின்னர் வருத்தப்படுவார்கள்.

நடந்து முடிந்த தேர்தலின் போது தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா செய்வதற்கு ஏதுவாக 144 தடை உத்தரவை பிறப்பித்தது. தற்போது இந்த தேர்தலில் 144 தடை உத்தரவு இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேர்தல் ஆணையம் செய்த தவறை உணர்ந்து கொள்ள இவ்வளவு காலம் ஆகிஇருக்கிறது. இந்த தேர்தல் காலத்தில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும். வைகோ ஒரு சிறந்த போராளி, ஒரு சிறந்த போராட்டகாரர். அவர் மூன்றாவது அணி என்ற ஒரு குழப்ப அணியை உருவாக்கி விஷப்பரீட்சை செய்து வருகிறார். இதை பார்த்து நாடே சிரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →