Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Traffic Ramaswamy’s sudden move to remove Jayalalitha banners in Srirangam sparks protest with ADMK men.

By   /  July 4, 2016  /  Comments Off on Traffic Ramaswamy’s sudden move to remove Jayalalitha banners in Srirangam sparks protest with ADMK men.

    Print       Email

16THTRAFFICRAM_2343883fதிருச்சி ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள ஜெயலலிதா பேனர்களை அகற்றிக் கோரி டிராபிக் ராமசாமி திடீர் போராட்டம்; அதிமுகவினருடன் மோதல்.

திருச்சி மாநகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் 4–வது முறையாக முதல்அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலைய சாலை மற்றும் கோவில் ராஜகோபுரம் செல்லும் வழி ஆகிய இடங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி திடீரென கிழிக்க ஆரம்பித்தார். மேலும் பேனர்களை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமி‌ஷனர் அங்குசாமி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர், மாநகராட்சி ஊழியர்களை உடனே வரவழைத்து டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என்றார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டது. அப்போது மாநகராட்சி அனுமதியுடன் வைக்கப்பட்ட பேனர்களையும் அகற்ற வேண்டுமென டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்தார். அந்த பேனர்களும் அகற்றப்பட்டது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க. வினர், அனுமதியுடன் வைக்கப்பட்ட பேனர்களை எப்படி அகற்றலாம் என்று தட்டிக் கேட்டனர். இது தொடர்பாக டிராபிக் ராமசாமிக்கும், அ.தி. மு.க.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அ.தி.மு. க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →