Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

 Trisha becomes UNICEF celebrity advocate for child rights.

By   /  November 20, 2017  /  Comments Off on  Trisha becomes UNICEF celebrity advocate for child rights.

    Print       Email

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு குரல் கொடுங்கள்: த்ரிஷா

 

InCorpTaxAct
Suvidha

 

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுங்கள் என்று யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பொறுப்பேற்ற த்ரிஷா பேசினார்.

யுனிசெஃப் அமைப்பு இந்தாண்டிற்கான உலக குழந்தைகள் தின (நவ.20) தலைப்பாக “குழந்தைகள் கையகப்படுத்துதல்”(Children Take Over) என்பதை தேர்வு செய்தது. அதை பிரபலப்படுத்தும் விதத்திலும், அந்த அமைப்பின் நல்லெண்ண தூதுவராக நடிகை த்ரிஷாவை நியமிக்கவும் யுனிசெஃப் அமைப்பு சென்னையில் குழந்தைகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண  தூதுவராக பொறுப்பேற்ற நடிகை த்ரிஷா, தமிழ்நாடு குழந்தை உரிமை அமைப்பின் தலைவர் நிர்மலா மற்றும் யுனிசெஃப் அதிகாரி சுகதா ராய் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர்.

யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா ‘தி இந்து’ தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “இப்போதுள்ள குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதை விட, அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. அதனால்தான், இந்தாண்டு தலைப்பை “குழந்தைகள் கையகப்படுத்துதல்” என்று வைத்துள்ளோம். இன்று (நவ.20) டெல்லியில் உள்ள யுனிசெஃப் மையத்தை குழந்தைகள் நடத்தப் போகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், நடிகை த்ரிஷாவை யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண  தூதுவராக அறிவிக்கவுள்ளோம். தென் இந்தியவில் இதுவரை யுனிசெஃப் யாரையும் நியமித்தது கிடையாது. இதுவே முதல் முறை.”

என்று அவர் கூறினார்.

குழந்தைகளின் கைதட்டலுக்கு இடையில் நடிகை த்ரிஷா பேசியதாவது, “உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டியது. நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கவேண்டும். நான் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த விரும்புகிறேன். திறந்த இடத்தில் மலம் கழித்தல், ஊட்டச்சத்து குறைபாடு இவை அனைத்தும் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு படிப்பு மிக அவசியம், அவர்கள் படிப்பதனால் நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்” என்று பேசினார்.

பின் த்ரிஷா குழந்தைகளிடம் உரையாடினார். யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, த்ரிஷாவிற்கு நினைவுப் பரிசு அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளுடன் த்ரிஷா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →