Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Trouble for kejriwal –led AAP Government Gopal Rai resigns and 21 MLA’S face disqualification: Congress and BJP hit out.

By   /  June 14, 2016  /  Comments Off on Trouble for kejriwal –led AAP Government Gopal Rai resigns and 21 MLA’S face disqualification: Congress and BJP hit out.

    Print       Email

52202880டெல்லியில் ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம், அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை செயலாளர்களாக நியமிக்கப்பட்டு, இணை மந்திரி அந்தஸ்து அனுபவித்து வருகின்றனர். ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து, பதவி பறிப்பு ஆபத்தின்கீழ் அவர்கள் உள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

அவர்களது பதவியை காப்பாற்றும் வகையில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பி.எல். புனியா கூறும்போது, “இந்த விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறும்போது, “ஆதாயப் பதவி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மிக தெளிவாக உள்ளது. எனவே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →