டிரம்ப் வெற்றி; சீனக் குரங்கும், சென்னையின் சாணக்யா மீனும் சொன்ன ஆரூடம் பலித்தது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனாநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சி சார்பில் பேட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இது தொடர்பான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்தன. ஒரு சில கருத்துக்கணிப்புகள் டிரம்புக்கு சாதகமாக இருந்தன.
இந்நிலையில், டிரம்ப் வெற்றி பெறுவார் என்று சென்னையில் உள்ள தன்னார்வ அமைப்பின் சாணக்யா என்ற மீன் கணித்து கூறியிருந்தது. டிரம்ப் மற்றும் ஹிலாரி படம் கொண்ட பொருட்களை அந்த மீன் இருந்த தொட்டிக்குள் வைக்க, டிரம் படத்தை தொட்டு தேர்வு செய்தது. கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை வெல்லும் என இதே சாணக்யா மீன் கணித்திருந்தது. எனவே, இந்த தேர்தல் கணிப்பும் சரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சீனாவில் உள்ள குரங்கு ஒன்று டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று தெரிவித்திருந்தது. ஏற்கெனவே நடைபெற்று முடிந்த உலகக் கால் பந்தாட்டத்தின்போது முக்கியமான ஆட்டங்களில் எந்த அணி வெல்லும் என்பதையும் உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என்பதையும் துல்லியமாகச் சொல்லியிருந்தது அந்தக் குரங்கு. அதே குரங்கின் கணிப்பு சரியாக இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதால், மீன் மற்றும் குரங்கின் தேர்தல் ஆரூடம் பலித்துள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.