Loading...
You are here:  Home  >  World News  >  Australia News  >  Current Article

Tsunami hits New Zealand coast after powerful earthquake.

By   /  November 13, 2016  /  Comments Off on Tsunami hits New Zealand coast after powerful earthquake.

    Print       Email

eight_col_image-1கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி; நியூசிலாந்தில் பயங்கரம். சேத விவரம் தெரியவில்லை.

நியூசிலாந்து நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்ட்சர்ச். இந்திய நேரப்படி மாலை 4.32 மணிக்கு கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுவரை சேதம் குறித்த எந்த தகவலும் உடனடியாகத் தெரியவில்லை.

InCorpTaxAct
Suvidha

கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சற்று நேரத்தில் சுனாமியும் மோசமாகத் தாக்கியது.

நிலநடுக்கத்தைப் பற்றிச் சொன்ன ஒரு பெண்மணி “எங்கள் வீடு ஒரு பாம்பு சுருள்வதைப்போல சுருண்டு விட்டது. பொருள்கள் எதுவும் மிஞ்சியிருக்க வாய்ப்பில்லை” என்றார். நள்ளிரவு நேரம் என்பதால் விடிந்த பிற்பாடுதான் சேத விவரம் சரிவரத் தெரியவரும் என்று தெரிகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் 185 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

TAMA Atlanta Grand Galore Sankranthi Festivities

Read More →