Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Two Central Cabinet Minister Resigned

By   /  July 13, 2016  /  Comments Off on Two Central Cabinet Minister Resigned

    Print       Email

201607130209559506_Over-75-Minister-Najma-Heptulla-Resigns-Minister-Who-Bought_SECVPFமத்திய மந்திரிகளின் ராஜினாமா பின்னணி என்ன?

மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த சிறுபான்மை நலத்துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா, இணை மந்திரி ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

InCorpTaxAct
Suvidha

இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நஜ்மாவிடம் இருந்த சிறுபான்மை நலத்துறையை தனிப் பொறுப்பாக கவனிக்கும்படி இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் கனரக தொழில்துறை இணையமைச்சராக பாபுல் சுப்ரியோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே வகித்து வந்த நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி-நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இந்நிலையில் நஜ்மா ஹெப்துல்லா ராஜினாமா செய்ததற்கு அவரின் வயதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நஜ்மாவிற்கு தற்போது 76 வயது ஆகிறது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நஜ்மா தெரிவித்துள்ளார்.

சித்தேஸ்வராவை கட்சி தலைமை கடந்த வாரமே ராஜினாமா செய்ய சொன்னதாகவும், ஆனால் அவர் தனது பிறந்த நாளை காரணம் காட்டி ஒரு வாரம் கழித்து ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →