Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Two weight lifters will get berth for Olympics.

By   /  May 3, 2016  /  Comments Off on Two weight lifters will get berth for Olympics.

    Print       Email

உஸ்பெகிஸ்தானில் நடந்த சீனியர் பளுதூக்குதல் போட்டியில் தேர்வு. கோட்டா முறையில் இருவருக்கு ஒலிம்பிக்சில் இடம்.weightlifting

ஆசிய சீனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சிறப்பாக செயல்பட்டதால் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு வீரர் மற்றும் வீராங்கனை பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான தகுதி சுற்றான ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 100 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தது. கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பூனம் யாதவ் (63 கிலோ உடல் எடைப்பிரிவு) 6-வது இடத்தையும், சாய்ஹோம் மிராபாய் சானு (48 கிலோ), தசனா சானு (58 கிலோ) ஆகியோர் தலா 7-வது இடத்தையும் பிடித்தனர். 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சஞ்ஜிதா சானு 9-வது இடம் பெற்றார். இந்திய ஆண்கள் அணி 129 புள்ளிகளுடன் 6-வது இடத்தை தனதாக்கியது.

இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் 2 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர். இது குறித்து இந்திய பளுதூக்குதல் பெடரேஷன் துணைத்தலைவர் சக்தேவ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொள்ள 2 பேருக்கு இட ஒதுக்கீடு (கோட்டா) மூலம் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் ஒரு வீரர், ஒரு வீராங்கனை பங்கேற்க முடியும். இந்த இட ஒதுக்கீடுக்கான வீரர்-வீராங்கனையை தேர்வு செய்ய நாங்கள் தகுதி தேர்வு நடத்த இருக்கிறோம்.

ஆசிய போட்டியில் வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விட்டு தற்போது தான் நாடு திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டு தகுதி சுற்று பந்தயம் நடத்தப்படும். தகுதி சுற்று நடைபெறும் தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து எடைப்பிரிவினருக்கும் நடத்தப்படும் இந்த தகுதி தேர்வில் தேசிய பயிற்சி முகாமில் இருக்கும் வீரர்- வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க தகுதி படைத்தவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →