Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

U.S envoy apologizes to Shah Rukh Khan for detention at Los Angels

By   /  August 12, 2016  /  Comments Off on U.S envoy apologizes to Shah Rukh Khan for detention at Los Angels

    Print       Email

Shah-Rukh-Khan1லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக்கானுக்கு இடையூறு; அமெரிக்க தூதர் மன்னிப்பு கேட்டார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவுக்கு போகும் போதெல்லாம் அங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் சிக்கி படாதபாடு பட வேண்டியதாகி விடுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு சென்றபோது நியூ ஜெர்சி விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

InCorpTaxAct
Suvidha

அங்குள்ள கம்ப்யூட்டர்களில் ஷாருக் கான் என்ற பெயருக்கு பக்கத்தில் அபாய எச்சரிக்கை காணப்பட்டதால் அவரை துருவித்துருவி விசாரித்த அதிகாரிகள் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். பின்னர், இவர் வேறு ஷாருக் கான் என்பது தெளிவான பின்னரே அவரை தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதித்தனர்.

இதேபோல், கடந்த 2012-ம் ஆண்டும் நியூயார்க் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரை 2 மணிநேரம் காக்கவைத்து, தீவிர விசாரணைக்கு பின்னர் அனுமதித்தனர்.

இந்நிலையில், தற்போது நியூ ஜெர்சி விமான நிலையத்தில் தன்னை குடியுரிமைத்துறை அதிகாரிகள் மீண்டும் காக்கவைத்த சம்பவத்தை ஷாருக் கான் தனது டுவிட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.

’உலகம் இன்று இருக்கும் நிலையில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை நான் முழுமையாக புரிந்து வைத்துள்ளேன். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மதிப்பும் அளிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவுக்கு வரும்போதும் இங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளால் காக்க வைக்கப்படுவது வேதனைக்குரியது.

ஆனால், இந்தமுறை காத்திருந்த நேரத்தில் சில போக்கிமோன்களை பிடிக்க முடிந்தது’ என வேதனை கலந்த கிண்டல் தொணியில் அமெரிக்க விமான நிலையத்தில் தற்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஷாருக் கான் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக் கானை லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் நிறுத்திவைத்த சம்பவத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதர் ரிச்சர்ட் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது விவகாரத்தில் அக்கறை எடுத்து கொண்டமைக்காக ரிச்சர்ட் வர்மாவுக்கு ஷாருக் கான் நன்றி தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →