Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

UGC makes inclusion of Yoga Optional for Physiotherapy.

By   /  June 8, 2016  /  Comments Off on UGC makes inclusion of Yoga Optional for Physiotherapy.

    Print       Email

Health---Yogaபிசியோதெரபி மருத்துவர்கள் எதிர்ப்பு எதிரோலி; யோகா பாடம் கட்டாயமல்ல – யூ.ஜி.சி. புதிய சுற்றறிக்கை.

பிசியோதெரபி மருத்துவர்கள் எதிர்ப்பு காரணமாக, யோகா தொடர்பான சுற்றறிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) மாற்றம் செய்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் ஆயுஷ் துறைகளின் உத்தரவின் பேரில், நாட்டின் கல்வி நிலையங்களுக்கு யூஜிசி சார்பில் கடந்த மே 19-ம் தேதி ஒரு சுற்றறிக்கை விடப்பட்டது. இதில் பிசியோதெரபி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் (பிபிடி மற்றும் எம்பிடி) யோகா குறித்த பாடத்தை இணைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால் பிசியோதெரபி படிப்புக்கு பாதிப்பு உண்டாகும் எனப் புகார் எழுந்தது. இது தொடர்பான செய்தி கடந்த ஜூன் 2-ம் தேதி ‘தி இந்து’விலும் வெளியானது.

இதையடுத்து யூஜிசி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண் டுள்ளது. அனைத்து கல்வி நிலை யங்களுக்கும் புதிய சுற்றறிக் கையை நேற்று அனுப்பியுள்ளது. இதில், 80 மணி நேர யோகா பாடங்களை பிசியோதெரபியில் சேர்ப்பது கட்டாயம் அல்ல என்றும் விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் இதை போதிக்கலாம் என்றும் யூஜிசி கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய பிசியோ தெரபிஸ்டுகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.எம்.அண்ணா மலை, ‘தி இந்து’விடம் கூறும் போது, “புதிய உத்தரவில் யோகாவை விருப்பப் பாடமாக அறிவித்துள்ளதால் அதை எதிர்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. பிசியோதெரபி பட்ட மேற்படிப்பில் இருக்கும் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒன்றாக யோகாவை சேர்க்கலாம். இல்லை யெனில் முறையான ஆதாரங் களுடன் நிரூபிக்கப்பட்ட பாடமாக யோகா மாறிய பின் அதை பிசியோதெரபியில் சேர்க்கலாம்” என்றார்.

யோகாவின் மருத்துவப் பலன்கள் குறித்து தேவையான ஆய்வுகள் இன்னும் மேற் கொள்ளப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவப் படிப்பை தொடர்ந்து சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தை பிசியோதெரபி வகிக்கும் நிலை யில், அதற்கான பாடங்களை போதிக்கவே கால அவகாசம் போத வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேவையின்றி யோகாவை நுழைத்தால் பிசியோ தெரபி படிப்பு பாதிக்கப்படும் என்பது அத்துறையினரின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும் முன், பிசியோ தெரபி நிபுணர்கள் ஒருவரை கூட கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் புகார் கிளம்பியது.

ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து யோகாவை வளர்க்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முயற்சிகளில் ஒன்றாக யூஜிசியின் சுற்றறிக்கை பார்க்கப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →