Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

UP elections: Modi promises loan waiver for farmers, slams Akhilesh for crime stats

By   /  February 20, 2017  /  Comments Off on UP elections: Modi promises loan waiver for farmers, slams Akhilesh for crime stats

    Print       Email

modi7592பாஜக அரசு அமைந்தால் உடனடியாக விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி: நரேந்திர மோடி பேச்சு

 

InCorpTaxAct
Suvidha

 

 

உத்திரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்து மக்கள் விரும்பும் ஆட்சி அமைய மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

உத்திரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 4வது கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள பதோபூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொணடார்.

அப்போது பேசிய மோடி, உத்திரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை கட்டிக்காப்பதை ஆளும் சமாஜ்வாதி கட்சி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. யூரியா தட்டுப்பாட்டை நீக்கி விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சனையை மத்திய அரசு போக்கியது. கிராமங்களில் ஏழை மக்கள் இலவச எரிவாயு இணைப்பு பெற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. உத்திரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும். மார்ச் 11ந்தேதி முடிவுகள் வெளியானதும், பாஜக ஆட்சிக்கு வரும் இரண்டு அல்லது நான்கு நாட்களில் பதவியேற்பு விழா நடைபெறும். புதிய அரசு அமைந்ததும், அதன் முதல் கூட்டம் நடைபெறும். அந்த முதல் கூட்டத்திலேயே விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →