Loading...
You are here:  Home  >  Community Events  >  Current Article

Uttar Pradesh Congress preparing for Assambly Election. Invites Priyanka Gandhi to take leadership.

By   /  May 13, 2016  /  Comments Off on Uttar Pradesh Congress preparing for Assambly Election. Invites Priyanka Gandhi to take leadership.

    Print       Email

Congress-star-campaigner-Priyanka-Gandhi-33உத்திரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் ; பிரியங்கா காந்தி தலைமை ஏற்க காங்கிரசார் விருப்பம்.

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2017) தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

InCorpTaxAct
Suvidha

தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள போதிலும் அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகத் தொடங்கி விட்டன.

ஆளும் சமாஜ்வாதி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா அரசியல்வாதிகள் ஸ்டைலில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. பா.ஜனதா கட்சியானது, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் தான் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சமாளிக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்துடன் உள்ளது.

பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் – ஜனதா தளம் கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்க வியூகம் வகுத்துள்ளன. அந்த மெகா கூட்டணியில் மாயாவதியை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள், பிரியங்கா தலைமையில் உ.பி. சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பிரியங்கா தலைமையேற்றால் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே பிரியங்கா அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரசாரம் செய்வது போல உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் 600 வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கான பிரசார வியூகத்தை, மோடிக்கு பிரசார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்து வருகிறார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →