Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Uttar Pradesh Police asked to find BJP legislator Ram Shankar Katheria’s missing dog

By   /  August 14, 2016  /  Comments Off on Uttar Pradesh Police asked to find BJP legislator Ram Shankar Katheria’s missing dog

    Print       Email

_f97390ac-6184-11e6-9978-9f336ca1cc3eஆக்ராவின் பாஜக எம்.பி.யின் வீட்டு நாய் காணவில்லை: உ.பி. போலீஸ் தனிப்படை அமைத்து தேடுகிறதா?

மத்திய மனிதவளத் துறையின் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஆக்ராவின் எம்.பி.யுமான ராம்சங்கர் கத்தரியாவின் வீட்டு நாயை காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது வழக்கு பதிவு செய்த உ.பி. போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

InCorpTaxAct
Suvidha

உ.பி.யின் ஆக்ரா எம்.பி.யாக இருப்பவர் ராம்சங்கர் கத்தரியா. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சராக இருந்தவர், ஆக்ராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ‘கல்லூ’ எனும் பெயர் உடைய ஒன்றரை வயது லேப்ராடர் வகை நாய் செல்லமாக வளர்ந்து வந்தது. இது கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் காணாமல் போய் உள்ளது. இதன் மீது புகார் அளிக்கும் பொருட்டு ராம்சங்கரின் மனைவியான மிருதுளா கத்தரியா, ஆக்ரா நகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

தனது புகாரில் மிருதுளா கூறுகையில், ”காணாமல் போன பின் அக்கம், பக்கம் உள்ள பகுதிகளில் எங்கள் குடும்பத்தார் அனைவரும் தேடினோம். மூன்று நாளாகியும் கல்லூ எங்களுக்கு கிடைக்கவில்லை. இது தானாக வழிமாறி எங்கும் சென்று விட்டதா அல்லது வேறு யாராவது கடத்திச் சென்றார்களா என்பது தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆக்ரா போலீஸார் தனிப்படை அமைத்து ராம்சங்கர் கத்தரியா வீட்டு கல்லூவை தேடி வருகிறது. இதுபோல், வீட்டு விலங்குகளை தனிப்படை அமைத்து தேடுவது முதன்முறை அல்ல. இதற்கு முன் இருவருடங்களுக்கு முன்பு உ.பி. மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான ஆசம்கானின் 7 எருமைகள் காணாமல் போயின. ஆசம்கானின் தொகுதியான ராம்பூரில் அவரது பண்ணை வீட்டில் நடந்த சம்பவத்தில் உ.பி. போலீஸ் தனிப்படை அமைத்து தேடியது. இதில், முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ராம்பூரின் மூன்று போலீஸார் இடமாற்றல் செய்யப்பட்டனர். வெறும் ஐந்து நாட்களில் ஆசம்கானின் 7 எருமைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்வத்தை குறிப்பிட்டு மிருதுளா கத்தரியா குறிப்பிடுகையில், ”ஆசம்கானின் 7 எருமைகளை 5 நாட்களில் தேடிப்பிடிக்கும் போது, எனது கல்லூவையும் உபி போலீஸ் கண்டுபிடித்து விடும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், தனிப்படை அமைத்து தேடுவது குறித்து ஆக்ரா போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →