சென்னை தியாகராய நகரில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகிறோம். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எத்தனை? எந்தெந்த தொகுதிகள்? என்பதெல்லாம் முடிவாகி விடும்.
2ஜி விவகாரத்தில் நஷ்டம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கணக்குகளை கூறுகிறார்கள். இதெல்லாம் யூகத்தின் அடிப்படையிலானது.
கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தீர்ப்பு வரும்வரை யாரையும் குற்றவாளி என்று குறை கூறுவதோ, விமர்சிப்பதோ தவறு.
இந்த தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிதான் வலுவான கூட்டணியாக களத்தில் நிற்கிறது. இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதி. தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து விரைவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம்.- இவ்வாறு கூறினார். அவரிடம்-
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவிடம் தனியார் டி.வி. நிருபர் ஒருவர் பேட்டி காண சென்றார். அப்போது கூட்டணி பேரம் தொடர்பாக அ.தி.மு.க.விடம் ரூ.1,500 கோடி வாங்கினீர்களாமே என்று நிருபர் கேட்டதும் வைகோ ஆவேசம் அடைந்தார். உடனே மைக்கை தூக்கி போட்டு விட்டு வெளிநடப்பு செய்தார்.
இதுபற்றி இளங்கோவன் கூறியதாவது:–
பேட்டியின்போது வைகோ நிருபரின் கேள்விக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரது பாணியில் வெளிநடப்பு செய்து இருக்கிறார்.
விஜயகாந்த் அவர்கள் கூட்டணியில் சேர்ந்து இருப்பதால் விஜயகாந்தின் பழக்க வழக்கங்களும் வைகோவுக்கு வந்து விட்டது. கூட்டணியில் ஒன்றாக சேரும்போது பழக்க வழக்கங்களும் ஒன்றாகத்தானே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.