Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Vaiko joins farmers protest in Delhi and made a walk out.

By   /  March 27, 2017  /  Comments Off on Vaiko joins farmers protest in Delhi and made a walk out.

    Print       Email

201703270011254072_MDMK-Chief-Vaiko-joins-farmers-protest-in-Delhi_SECVPFடெல்லியில் நடந்துவரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு வைகோ ஆதரவு ;சற்று நேரத்தில் வெளிநடப்பு.

 

InCorpTaxAct
Suvidha

 

டெல்லியில் நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு வைகோ நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 13-வது நாளை எட்டிய இந்த போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விவசாயிகளை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். போராட்டக்காரர்களில் ஒருவரை பிணம் போல அலங்கரித்து கிடத்தி மற்றவர்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் வைகோவும் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்.  அவர் அமர்ந்திருந்த சமயத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் பெரும் திரளாக வந்து கலந்துகொண்டதாகவும் அவர்கள் வருகையை வைகோ விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் அவர்களையும் சேர்த்துக்கொண்டு போராடுவதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனை போராட்டக் களத்தில் இருந்தவர்கள் ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. உடனே அங்கிருந்து வைகோ கிளம்பிவிட்டார் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-

தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதிநிதிகள் இவர்கள். இவர்களை யாரும் அலட்சியமாக நினைக்கக்கூடாது. இவர்களுடன் ஒரு விவசாயியாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். இவர்களோடு பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். எங்கும் கட்சி பற்றி பேசுவது இல்லை. எங்களுக்காக ஓட்டு கேட்டதும் கிடையாது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாநில அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இவர்களுக்கான நிவாரணத்தை பெறுவதற்காக மாநில அரசு சார்பில் இதுவரை 4 முறை நேரில் வந்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை பயன்படுத்தி மாநிலத்துக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

A1D81252-D388-4F26-BDA7-00B63F9BBEA2_L_styvpfதமிழக விவசாயிகளின் வறட்சி நிவாரணத்துக்கு, கேட்டதற்கு மிகவும் குறைவாக மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது பச்சைத் துரோகம். தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டங்களை முன்னின்று நடத்துவேன். ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

ரஜினிகாந்தின் இலங்கை பயணம் ரத்தானது குறித்த கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →