Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Vaiko says Makkal Nala Koottani will face local election together with 4 parties.

By   /  July 20, 2016  /  Comments Off on Vaiko says Makkal Nala Koottani will face local election together with 4 parties.

    Print       Email

p100aஉள்ளாட்சித் தேர்தலை மக்கள்நலக் கூட்டணி கட்சிகள் சேர்ந்தே சந்திக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இணைந்த மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கூட்டணியின் எதிர்காலம், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் ஆகியவை குறித்து பேசப்பட்டது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

InCorpTaxAct
Suvidha

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள்நல கூட்டியக்கமாக நிரந்தரமாக இருந்து, தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை காப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்தே சந்திப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கை கொண்டு வருவதை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →