Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vaiko starts election campaign from Pondicherry

By   /  February 6, 2016  /  Comments Off on Vaiko starts election campaign from Pondicherry

    Print       Email

TH09_VAIKO_1833682fபுதுவையிலிருந்து மக்கள் நலக்கூட்டணியின் பிரச்சாரம் துவங்குகிறது- வைகோ அறிவிப்பு.

மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

InCorpTaxAct
Suvidha

சுமார் 1½ மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் இன்று மாலை புதுச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டம் தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் மக்கள் நலக்கூட்டணி சார்பில் நடக்கும் குறைந்தபட்ச செயல் திட்ட விளக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் பிரசாரம் மற்றும் வியூகம் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளையும் ஊழலையும் ஒழிப்பதுதான் மக்கள் நலக் கூட்டணியின் முதல் பணி. வருகிற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். எங்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தை விளக்கி தமிழகம் முழுவதும் பிரசாரம் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.

புதுச்சேரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிகளில் பிரசார விளக்க பயணம் நடைபெறும். மக்கள் நலக் கூட்டணி நம்பகதன்மை கூட்டணி. மக்கள் நலனை காக்க கூடிய கூட்டணி. எங்கள் கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →