Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

‘Vijay Mallya should  give one bikini beauty each to every bank and square off all his debts’- says Ram Gopal Varma through Twitter.

By   /  March 15, 2016  /  Comments Off on ‘Vijay Mallya should  give one bikini beauty each to every bank and square off all his debts’- says Ram Gopal Varma through Twitter.

    Print       Email

vijay-mallya-new-reuters-L‘வங்கிக்கு ஒரு பிகினி அழகியை அனுப்பிவைத்து விஜய் மல்லையா தன்னுடைய கடனைத் தீர்த்துக்கொள்ளலாம்’- விஜய் மல்லய்யாவுக்கு ராம்கோபால் வர்மா குறும்பு யோசனை.

பிரபல தொழில் அதிபரும்  மாநிலங்களவை எம்.பி.யுமான விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை.

InCorpTaxAct
Suvidha

இதைத் தொடர்ந்து ”வேண்டும் என்றே கடனை திருப்பித் தராதவர்’ என்று இந்த வங்கிகளால் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார். அவருக்கு கடன் கொடுத்த 13 வங்கிகள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், விஜய் மல்லையா வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்று வங்கிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும் கடந்த 2–ம் தேதியே விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு சென்று விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட் செய்துள்ளார்.

அதில், ”விஜய் மல்லையா,  தான் கடன் வாங்கியுள்ள வங்கிகளுக்கு, தனது சொந்த வங்கியில் இருந்து வங்கிக்கு ஒரு பிகினி அழகியை அளித்தால் கடன் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், ”விஜய் மல்லையாவின் பிகினி திட்டத்தை வங்கிகள் ஏற்காது. ஆனால் வங்கி அதிகாரிகள் ஏற்கக்கூடும். விஜய் ram-gopal-varma(10)மல்லையாவின் பிகினி அழகிகள் வங்கிகளுக்கு அளித்த செக்யூரிட்டியில் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்று கருதுகிறேன். அதனால் வங்கி அதிகாரிகள் புகார் கூறக் கூடாது” எனவும் தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →