Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  avoids Javadekar,  says  no  decision  on  deal  yet.

By   /  March 4, 2016  /  Comments Off on Vijayakanth  avoids Javadekar,  says  no  decision  on  deal  yet.

    Print       Email

120326061854_vijayakanth-5பாஜகவின் மத்திய அமைச்சர் சந்திப்பைத் தவிர்த்தார் விஜயகாந்த்; கூட்டணி ஏற்படாததால் பாஜக அதிருப்தி.

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க பா.ஜனதா மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

InCorpTaxAct
Suvidha

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து பா.ஜனதா தலைவர் அமித்ஷா மத்திய மந்திரி ஜவடேகரை தனது பிரதிநிதியாக தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார்.

தமிழக நிர்வாகிகளுடன் சேர்ந்து விஜயகாந்தை ஜவடேகர் சந்தித்து பேசினர். அந்த பேச்சு விவரங்களையும், விஜயகாந்தின் நிபந்தனைகளையும் அமித்ஷாவிடம் தெரிவித்தார்.

மேலிடத்தின் பதிலுடன் 2–வது முறையாக நேற்று ஜவடேகர் தன்னந்தனியாக ரகசியமாக விஜயகாந்தை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சந்திக்க ஜவடேகர் முயன்றதாகவும் விஜயகாந்த் அதனைத் தவிர்த்துவிட்டார் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது.

நேற்று மதியம் 1.05 மணிக்கு விஜயகாந்த் திடீரென்று வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.

திருக்கோவிலூருக்கு அவர் செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி கட்சியினருக்கு முன் கூட்டியே தகவல் எதுவும் தெரியப்படுத்தவில்லை. நேற்று மதியம் தான் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பிறகுதான் அவசர அவசரமாக பஸ் நிலையம் அருகே மேடை அமைத்தார்கள்.

பாஜகவினருக்கு விஜயகாந்த் திருப்தியான பதில் எதையும் கூறாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதா கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் திருக்கோவிலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசியதாவது:–

நான் இன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்திருப்பதை பார்த்து கூட்டணி பேரம் பேசத்தான் வந்திருக்கிறேன் என்று கூறுவார்கள். நான் கூட்டணிக்காக யாரிடமும் பேரம் பேசியதில்லை. நான் பார்க்காத பணம் இல்லை. புகழ் இல்லை. சிலர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இதை நம்பாதீர்கள்.

நான் இதுவரை தனியாகத்தான் இருக்கிறேன். கூட்டணி பற்றி எதுவும் தெரியாது. கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேசவும் இல்லை. பேரம் பேசவும் இல்லை. நான் தெளிவாக தைரியமாக இருக்கிறேன்.

எதை செய்தாலும் என் தொண்டர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து தான் கூட்டணி பற்றி சொல்வேன்.

தொண்டர்களுக்கு நான் சொல்வது தான் வேதவாக்கு. நான் பேரம் பேசத்தான் கூட்டணியை இழுத்தடிக்கிறேன் என்று டி.வி.க்களில் விவாதம் செய்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ்–அப்பில் ஏதேதோ போடுகிறார்கள். இதில் எதையும் நம்பாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →