Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth cancels Delhi visit, Waiting for the new development

By   /  February 5, 2016  /  Comments Off on Vijayakanth cancels Delhi visit, Waiting for the new development

    Print       Email

vijayakanthyவிஜயகாந்தின் டெல்லிப் பயணம் ரத்து. பாஜக- திமுக முடிவுக்காக காத்திருக்கிறார்.Karunanidhi_12

அ.தி.மு.க.வுக்கு எதிராக வியூகம் அமைக்கும் தி.மு.க. தங்கள் பக்கம் விஜயகாந்தை இழுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. பா.ஜனதாவும் விஜயகாந்தை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

InCorpTaxAct
Suvidha

எந்த பக்கம் செல்வது? என்ன முடிவு செய்வது? என்ற குழப்பத்தில் விஜயகாந்த் இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் தி.மு.க. அணிக்கு செல்வதற்கே ஆதரவு அதிகமாக இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

மக்கள் நலகூட்டணியிலோ அல்லது பா.ஜனதா கூட்டணியிலோ இடம் பெற்றால் வெற்றி வாய்ப்பு குறைவு என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பா.ஜனதா தரப்பில் விஜயகாந்திடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைப்பதற்கான முயற்சி நடக்கிறது.

இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் சுதீஷ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இன்று டெல்லியில் அமித்ஷாவை விஜயகாந்த் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில் அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புது கூட்டணியை உருவாக்க சுப்பிரமணியசாமி புதுவியூகம் வகுத்து வருகிறார். அவரது முயற்சிக்கு அமித்ஷாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டார். எனவே விஜயகாந்த்துடனான சந்திப்பு தள்ளிபோய் விட்டது.

தற்போது உருவாகி வரும் புதிய கூட்டணி முயற்சிகள் பற்றி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது இந்த புது கூட்டணி அமைந்தால் தி.மு.க., பா.ஜனதா ஆகிய தரப்புகளில் இருந்து வரும் கூட்டணி அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

முதலில் தி.மு.க.–பா.ஜனதா இடையே உடன்பாடு எட்டட்டும். அதற்கு பிறகு நாம் நமது முடிவை தெரிவிக்கலாம் என்றும் கருத்து 30-1454133275-tamilisai-soundararajan46-600தெரிவித்துள்ளனர். விஜயகாந்தும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அவசரம் காட்ட வேண்டாம். பொறுமையாக இருப்போம். காலம் நமக்கு சாதகமாக கனியும் என்று குறிப்பிட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

-அமுதவன்,

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →