Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  change his  decision,  may  align with  DMK- says DMDK  leader.

By   /  March 18, 2016  /  Comments Off on Vijayakanth  change his  decision,  may  align with  DMK- says DMDK  leader.

    Print       Email

விஜயகாந்த் திமுக அணியில் சேரலாம் – வாய்ப்பிருப்பதாக தேமுதிக தலைவர் கருத்து.120326061730_Vijayakanth-1

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்த பக்கம் சாயும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. முதலில் தி.மு.க. கூட்டணியில் சேரும் என்று ஊடகங்களிலும் ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைதளங்களிலும் தகவல் வெளியானது.

InCorpTaxAct
Suvidha

ஆனால் கடந்த 11–ந் தேதி நடந்த மகளிர் அணி கூட்டத்தில் தனித்து போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் என்று நம்பி தே.மு.தி.க.வில் சீட் கேட்டு பணம் கட்டி இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வருகிறார்கள்.

இப்படி கேட்ட நிர்வாகிகளிடம் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. தலைமை கழக நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி சேர விஜயகாந்த் மனதில் எண்ணம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:–

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். எங்களது தலைவர் கேப்டன் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்த போது உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல் ஆகியவற்றிலும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று அ.தி.மு.க.விடம் எங்கள் தலைவர் கேட்டார். ஆனால் சட்டசபை தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி அமைத்தனர். இதனால் தே.மு.தி.க.வினர் எம்.எல்.ஏ. ஆனாலும் தொடர்ந்து அவர்களால் மக்கள் பணியாற்ற முடியவில்லை. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அ.திமு.க.வுக்கு இழுத்தனர்.

தே.மு.தி.க.வினர் மீது வழக்கு போட்டு பழி வாங்கினர். தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகம் பேர் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை.

ஆனால் இந்த முறை சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல் ஆகிய 3–க்கும் சேர்த்து இப்போதே பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று எங்கள் தலைவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்கு மட்டும் தான் கூட்டணி என்று கூறிவிட்டனர். உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்.

இதனால் தான் கூட்டணி சேரமுடியாத நிலை உருவானது. அ.தி.மு.க.வை போல தி.மு.க.வும் செயல்பட்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் என்ற சந்தேகமும் தே.மு.தி.க.வை வளரவிடாமல் செய்துவிடுவோமே என்ற பயமும் தான் கூட்டணி ஏற்படவிடாமல் தடுத்தது.

துணை முதல்–மந்திரி, அமைச்சர்கள் பதவி என்பதெல்லாம் ஒரு பெரிய பொருட்டே அல்ல. தே.மு.தி.க.வினர் மீது வழக்கு பாய்ந்து அவர்கள் பழிவாங்கப்படும் சூழ்நிலை மீண்டும் ஒரு முறை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் விஜயகாந்த் கூட்டணி பற்றி பேசும்போதே எல்லாவற்றையும் தெளிவு படுத்திவிட வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை.

தி.மு.க. இறங்கி வந்தால் மீண்டும் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது. இதுபற்றி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தே.மு.தி.க. தலைமையை ஏற்க முடியாது என்றும் எங்கள் தலைமையை ஏற்று தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணிக்கு வரவேண்டும் என்றும் வைகோ, முத்தரசன் ஆகியோர் அறிவித்து விட்டனர்.

அதேபோல பாரதீய ஜனதாவும் தங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர வேண்டும் என்று தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர முடியாத நிலை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வுடன் சேரலாமா? என்று நிர்வாகிகள், தொண்டர்களிடம் விஜயகாந்த் போனில் தொடர்பு கொண்டு கருத்து கேட்டு வருகிறார்.

மனு தாக்கலுக்கு இன்னும் 1 மாதம் இருப்பதால் கூட்டணி குறித்து மெதுவாக முடிவு செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் விஜயகாந்த் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →