Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth contesting from Ulundur Pettai.

By   /  April 18, 2016  /  Comments Off on Vijayakanth contesting from Ulundur Pettai.

    Print       Email

48412179உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் விஜயகாந்த்.

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

InCorpTaxAct
Suvidha

கடந்த 2011-ல் ரிஷிவந்தியத்திலும், 2006-ல் விருத்தாச்சலத்திலும் விஜயகாந்த் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவிடம் மமக திருப்பித் தந்த உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுகிறார். முன்னதாக, இத்தொகுதி திமுக கூட்டனியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தத் தொகுதியை அக்கட்சி திருப்பித் தந்துவிட்டது. இதனையடுத்தே உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சி அறிவித்தது.

இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாமகவை குறிவைக்கும் தேமுதிக

தேமுதிக – ம.ந.கூட்டணி – தமாகா அணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 104 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் வட மாவட்டங்களில் உள்ளன.

தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட பிறகே வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதனால்தான் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விஜயகாந்தை தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பாமக அன்புமணியை முன்னிறுத்தி, வட மாவட்டங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, திமுக, அதிமுக மட்டுமன்றி தேமுதிகவையும் புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

அதேபோல், இதுவரை தேர்தல் பிரச்சாரங்களில் பாமகவை விமர்சிக்காமல் இருந்த விஜயகாந்த், இப்போது திமுக, அதிமுகவுடன் சேர்த்து பாமகவையும் விமர்சித்து வருகிறார்.

இந்த அடிப்படையிலேயே கடந்த தேர்தல்களில் பாமகவுக்கு செல்வாக்குள்ள விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், இந்த முறை உளுந்தூர்பேட்டையை தேர்வுசெய்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →