Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Vijayakanth  doesn’t  have  any  policy  or  theory’- condemns  Anbumani

By   /  March 4, 2016  /  Comments Off on ‘Vijayakanth  doesn’t  have  any  policy  or  theory’- condemns  Anbumani

    Print       Email

08TH_ANBUMANI_1136856e‘விஜயகாந்துக்கு எந்தவிதமான கொள்கையோ கோட்பாடோ இல்லை’- அன்புமணி சாடல்.

கோவை விமானநிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறியதாவது;

InCorpTaxAct
Suvidha

ராஜீவ் கொலை வழக்கில் கைதான முருகன்,சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து இருப்பது தேர்தல் நாடகம். கடந்த டிசம்பர் மாதமே உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அப்போதே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு நினைத்தால் 161–வது சட்டப்பிரிவை பயன்படுத்தி அந்த 7 பேரையும் இன்றே விடுதலை செய்யலாம். ஆனால் இத்தனை நாட்கள் எதுவும்செய்யாமல் இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறுவது தேர்தல் நாடகம்தான்.

7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை. ஆனால் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது நியாய மான கோரிக்கை. அது தமிழக மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையும் ஆகும்.

கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. எங்களிடம் இன்னமும் பேசவில்லை. எங்களுக்கு பா.ஜ.க.வுடனோ அல்லது வேறு யாருடனோ கூட்டணி சேர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தனியாகவே தேர்தலை சந்திக்க தகுதியும், பலமும் எங்களிடம் உள்ளது.

எங்களுக்கு என்று கொள்கைகள் உள்ளது. ஆனால் எதிர்கட்சிதலைவராக இருந்த விஜயகாந்த் தி.மு.க.வுடனும் கூட்டணி பேசுகிறார். காங்கிரஸ்சுடனும் பேசுகிறார். பா.ஜனதாவுடனும் பேசுகிறார். வேறு சில கட்சிகளுடனும் பேரம் பேசுகிறார். இவ்வாறு பேரம் பேசுவது நல்லது அல்ல. அவரது கட்சிக்கு என என்ன கொள்கை இருக்கிறது?

ஆளும் கட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தி.மு.க.வை பொறுத்தவரை அது மூழ்கும் கப்பல். அந்த கட்சியுடன் கூட்டணி சேருபவர்களும் மூழ்கி போவார்கள். விஜயகாந்த் கட்சி கரைந்து விட்ட கட்சி. அவர் தெளிவான நிலையில் இல்லை. அவர் குழப்பமாக பேசி மக்களையும் குழப்புகிறார்.

எங்களை பொறுத்தவரை வேட்பாளர்கள் தேர்வில் இளைஞர்கள் அதிகளவில் இருப்பார்கள். பெண்களுக்கும் முன்னுரிமை கொடுப்போம். 2014 தேர்தலை பொறுத்தவரை அது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பதால் நாங்கள் கூட்டணியில் சேர்ந்தோம்.

ஆனால் வரக்கூடிய தேர்தல் சட்டமன்ற தேர்தல். முதல்–அமைச்சரை தேர்வு செய்வதற்கான தேர்தல். தற்போது மக்கள் படித்த இளைஞர்கள் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் 5கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் 60 சதவீதம்பேர் பொது வாக்காளர்கள் ஆவார்கள். இதில் 3–ல் ஒரு பங்கு இளைய வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் 2½ கோடி இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த இளைஞர்கள் தி.மு.க., அ.தி.மு.க. வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளனர். எங்கள் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளை மக்கள் ஏற்று கொண்டு உள்ளனர். மதுவை ஒழிக்க பா.ம.க.வால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரத்தை இலவசமாக கொடுப்போம். ஆக்கப்பூர்வமான அரசியலை கொடுப்போம்.

தமிழகத்தில் 110–வது விதியின் கீழ் 185 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதில் 700 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற 1 லட்சத்து 49 ஆயிரம் கோடி நிதி தேவை. ஆனால் 7 ஆயிரத்து 500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்து உள்ளனர். எனவே இந்த அறிவிப்புகள் எல்லாம் வெற்று அறிவிப்புகள்தான். 60 வயதானவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவது கூட ஏமாற்றுவேலை தான்.

எனவே மாற்றத்தை எங்களால் மட்டும் தான் கொடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →