Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  has  not  taken proper  decision – says Elangoovan

By   /  February 21, 2016  /  Comments Off on Vijayakanth  has  not  taken proper  decision – says Elangoovan

    Print       Email

23JANSSY02--sho_24_2288049g‘கூட்டணி பற்றிய சரியான முடிவை விஜயகாந்த் எடுக்கவில்லை’- ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து.

தே.மு.தி.க. மாநாட்டில் தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சேருவது பற்றிய அவர் முக்கிய முடிவை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

ஆனால் கூட்டணி பற்றி இறுதி முடிவு எதையும் அறிவிக்காமல், விஜயகாந்த் பின்வாங்கி விட்டார். இது தி.மு.க. – காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம், விஜயகாந்தின் முடிவு பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை. தன்னை முதல்–அமைச்சர் வேட்பாளர் என்றும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை. எனவே அவரது முடிவு பற்றி இப்போது கருத்து கூறுவது சரியாக இருக்காது. இருப்பினும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சேருமாறு விஜயகாந்தை வீட்டுக்கு சென்று அழைக்கவும் தயாராகவே உள்ளேன்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போட்டியிட ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மனுக்களை ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று நேர்காணலை நடத்த உள்ளோம். அப்போது திறமையான வேட்பாளர்களை தேர்வு செய்வோம்.

விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு நிச்சயமாக சீட் வழங்கப்படாது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →