Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

VIjayakanth  may  join  BJP  alliance.

By   /  February 23, 2016  /  Comments Off on VIjayakanth  may  join  BJP  alliance.

    Print       Email

விஜயகாந்த் பாஜக கூட்டணியில் இணைவார் என்று தெரிகிறது.vijayakanth

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் இடையே சூதாட்டத்தை விட வேகமான ‘காய்’ நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மட்டும் உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்கும் முயற்சி மாத கணக்கில் நடந்து வருகிறது. இது தொடர்பாக விஜயகாந்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது. கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் நேரடியாக அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதே போல காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் விஜயகாந்தை இழுப்பதற்கான முயற்சியை பா.ஜனதாவும் மேற்கொண்டு உள்ளது.

அரசியல் களத்தில் தனக்கு மார்க்கெட் அதிகரித்த வருவதால் விஜயகாந்தும் யாருக்கும் பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார். தே.மு.தி.க. மாநாட்டில் தனது கூட்டணி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள்.

தற்போதைய நிலையில் தி.மு.க. பக்கம் சேருவதை தே.மு.தி.க. நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து தனது நிபந்தனைகளுடன் கூடுதல் தொகுதிகளை பெற்று தேர்தலை சந்திக்கலாமா? அல்லது பா.ஜனதாவுடன் இணைந்து தனித்தன்மையான பலத்தை பார்க்கலாமா? என்ற குழப்பத்தில் மூழ்கி உள்ளார்.

ஆனால் மனைவி பிரேமலதாவின் எண்ணம் வேறுவிதமாக உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற தங்களது எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. ஆதரவாளர்களாக மாறினார்கள்.  எனவே தி.மு.க. கூட்டணியில் இணைந்து பல எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றாலும் அவர்களை கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

எனவே இப்போதைக்கு கூட்டணி பேரத்தை உறுதிப்படுத்தி கட்சியையும் வலுப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும் என்று அவர் கருதுவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பா.ஜனதா தரப்பில் விஜயகாந்த் வைத்த நிபந்தனைகளில் ஒரு மேல்–சபை எம்.பி. பதவி உள்பட சில முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும் இன்னும் ஓரிருநாளில் அவை இறுதி வடிவம் பெறும் என்றும் தெரிகிறது.

இதனால் பா.ஜனதா கூட்டணியில் சேருவதற்கு விஜயகாந்த் தயாராகி விட்டார் என்றும் இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்றும் தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →