Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth met DMK V.I.P and held talks for alliance – Chandrakumar reveals secrets.

By   /  April 9, 2016  /  Comments Off on Vijayakanth met DMK V.I.P and held talks for alliance – Chandrakumar reveals secrets.

    Print       Email

hqdefault (3)திமுக பிரமுகரைச் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை விஜயகாந்த் நடத்தியது உண்மை- ரகசியங்களை உடைக்கிறார் சந்திரகுமார்.

தே.மு.தி.க. அதிருப்தி அணியைச் சேர்ந்த சந்திரகுமார் எம்.எல்.ஏ. அளித்த பேட்டி வருமாறு:–

InCorpTaxAct
Suvidha

தி.மு.க.  அ.தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக தே.மு.தி.க. உருவானது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றோம். அடுத்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தோம். நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை. ஆந்திராவுடன் நின்று விட்டது.

இதனால் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தோம். விஜயகாந்த்தும் வேட்பாளர் நேர்காணலின் போது தி.மு.க.வுடன் கூட்டணி என்றுதான் கூறி வந்தார். ஆனால் திடீர் என்று மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்து கட்சியை புதை குழியில் தள்ளி விட்டார்.

விஜயகாந்த் தான் முதல்– அமைச்சர் என்று பிரசாரம் செய்து வந்தோம். அதை வைத்து விஜயகாந்த்தை முன் நிறுத்தி வைகோ அவரை தங்கள் அணிக்கு கொண்டு போய் விட்டார். இது யாரோ ஒருவர் போட்டுக் கொடுத்த திட்டம். அதை வைகோ நிறைவேற்றி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

இதில் பணபேரமா என்பதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. செவி வழியாக கேட்ட செய்திக்கு என்னிடம் ஆதாரம் இல்லை. வைகோவின் சதிக்கு பிரேமலதா துணை போய்விட்டார். தி.மு.க.வில் 80 சீட்டும், ரூ.500 கோடியும் தருவதாக பேரம் நடப்பதாக குற்றம் சாட்டியவர் வைகோ முதல்–அமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்ட விஜயகாந்த் ஓட்டுப்போடக் கூட தகுதி இல்லாதவர்களுடன் கூட்டணி சேரலாமா? அவர் தவறான முடிவு எடுத்து விட்டார்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கிடைத்த அனுபவம் காரணமாக இப்போது தி.மு.க.வுடன் சேர முடிவு செய்தோம். நாம் கேட்கும் தொகுதிகள் கிடைக்கும், உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் கேட்போம் என்று விஜயகாந்த் கூறினார். கூட்டணி தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை அவரது வீட்டுக்கே சென்று விஜயகாந்த் 3 மணி நேரம் பேசி இருக்கிறார். அவர் சந்தித்து பேசியது எங்களுக்கு கூட தெரியாது. அவர் சொன்ன பிறகுதான் எனக்குத் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →