நான் கிங் ஆக இருப்பதையே தொண் டர்கள் விரும்புகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சு.
தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்ற பெயரில் தேமுதிகவின் மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் பேசியதாவது:
தேமுதிக மாநாட்டால் காஞ்சிபுரம் குலுங்கிவிட்டது. இந்த வெற்றிக்கு காரணமான ராணுவம் போன்ற தொண்டர் களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களைப் பற்றி எனது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரிடம் அடிக்கடி பெருமையாகச் சொல்வதுண்டு. எனது குடும்பம் இவ்வளவுதான். எனக்கு பழையச் சோறும் வெங்காயமும் போதும். எனக்கு மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்று சொன்ன ஜெயலலிதா இப்போது கூட்டணிக்காக முயற்சித்து வருகிறார். 234 தொகுதிகளுக்கும் இப் போது அவர்களால் வேட்பாளர்களை அறி விக்க முடியுமா என நான் கேட்கிறேன்.
எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து ‘அடுத்த தேர்தலில் தேமுதிக வுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும்’ என்று அதிமுக அமைச்சர்கள் சட்டப்பேரவை யில் பேசுகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற எல்லா இடைத் தேர்தல்களிலும் அதிமுக தோற்றது. பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோற்றுப் போனார். எனவே அதிமுக தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங் கப்படும் என ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 5 ஆண்டுகள் என்ன செய்து கொண் டிருந்தீர்கள்?
அதிமுக ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல். சாலைகள் படுமோசமாக உள் ளன. ஆட்சி முடியும் தருவாயில் அறிவிப்பு களை வெளியிடுவதால் எந்தப் பலனும் இல்லை. ஊழல் செய்தவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அதிமுக ஆட்சியின் அவலங்களை அக் கட்சியின் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
எனக்கு திரைப்படங்களில் மட்டுமே நடிக்கத் தெரியும். மக்களிடம் நடிக்கத் தெரியாது.
விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார்? ஏன் மவுனமாக இருக்கிறார்? என்றெல் லாம் பத்திரிகைகள் எழுதுகின்றன. வரும் தேர்தலில் என்ன செய்வது என்பதை நான் யோசித்து வருகிறேன். அதனை இப்போதே சொல்ல வேண்டியதில்லை.
என்னை நம்பிய தொண்டர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளித்து முடிவெடுப்பேன். தொண்டர்கள் வாழ்ந்தால் விஜயகாந்த் வாழ்வார். விஜயகாந்த் வாழ்ந்தால் தொண்டர்கள் வாழ்வார்கள். இனியும் தொண்டர்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். தொண்டர்களின் அன்பே எனக்கு போதுமானது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கிங்கா? கிங் மேக்கரா?
தனது உரையின்போது கூட்டணி வேண்டுமா அல்லது வேண்டாமா என விஜயகாந்த் தொண்டர்களைப் பார்த்து கேட்டார். வேண்டாம் என தொண்டர்கள் குரல் எழுப்பினர்.
நான் கிங்காக இருக்க வேண்டுமா அல்லது கிங் மேக்கராக இருக்க வேண் டுமா என்ற மற்றொரு கேள்வியை தொண் டர்களிடத்தில் விஜயகாந்த் கேட்டார். அதற்கு கிங் ஆகத்தான் இருக்க வேண் டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து ‘பத்திரிகையாளர்களே எங்கள் தொண்டர்கள் கூறுவதைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என கூறிய விஜயகாந்த் உரையை நிறைவு செய்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.