Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  supported MLA’s condemn  rebels

By   /  April 6, 2016  /  Comments Off on Vijayakanth  supported MLA’s condemn  rebels

    Print       Email

vijayakanthநீக்கப்பட்ட தேமுதிக எம்எல்ஏக்களுக்கு விஜயகாந்த் ஆதரவு எம்எல்ஏக்கள் கண்டனம்.

தே.மு.தி.க., தலைமை கூட்டணி குறித்த முடிவை தன்னிச்சையாக அறிவித்ததாகவும், தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் சந்திரகுமார் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களும், நிர்வாகிகள் சிலரும் நேற்று அதிரடியாக பேட்டியளித்தனர்.

InCorpTaxAct
Suvidha

இதனையடுத்து, உடனடியாக அதிருப்தி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி அதிரடியாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் தேதி நெருங்கி வரும் நிலையில் தே.மு.தி.க.,வில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சந்திரகுமார் உள்ளிட்ட நீக்கப்பட்ட அதிருப்தி நிர்வாகிகளுக்கு தே.மு.தி.க., எம்.எல்.ஏ-க்கள் பலர் இன்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி, தலைவர் இறுதி முடிவு எடுத்தால் அதற்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

மக்கள் நலக்கூட்டணிக்கு செல்லக் கூடாது என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை என்றும் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினோம்.

சந்திரகுமாருக்கு எல்லாவிதமான பதவிகளையும் தலைவர் விஜயகாந்த் கொடுத்தார். விஜயகாந்த் முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது.

இவ்வாறு பார்த்தசாரதி தெரிவித்தார்.

மேலும் எம்.எல்.ஏ அனகை முருகேசன் கூறுகையில், தேமுதிகாவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் ஒரு துரோகி. தி.மு.க., தூண்டுதலின் பேரில் அனைத்தும் நடக்கிறது என்று குற்றம்சாட்டினர்

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →