Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  Will Come To Our Alliance – Kushboo

By   /  February 14, 2016  /  Comments Off on Vijayakanth  Will Come To Our Alliance – Kushboo

    Print       Email

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார்- குஷ்பு நம்பிக்கை.1

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது கட்சி நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

InCorpTaxAct
Suvidha

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–

காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி ஏற்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

இந்த தேர்தலில் எல்லோரது எண்ணமும் அ.தி.மு.க. அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான். தி.மு.க.வாகட்டும், காங்கிரஸ் ஆகட்டும், தே.மு.தி.க.வாகட்டும் மக்கள் நல கூட்டணி ஆகட்டும் எல்லோரும் அ.தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் என்பதில்தான் உறுதியாக இருக்கிறார்கள்.

அந்த எண்ணம் நிறைவேற எல்லோரும் ஒன்றிணைந்து வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும்.

காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்தும் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். நிச்சயம் வருவார் என்று நம்புகிறேன்.

தி.மு.க.வில் இருந்து வெளியே வந்ததால் தேர்தல் நேரத்தில் அந்த கட்சிக்கு ஆதரவாக எப்படி பிரசாரம் செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். இதில் என்ன இருக்கிறது? அரசியலில் நான் தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தேன் அவ்வளவுதான். இப்போது ஒரே கூட்டணியில் இருக்கிறோம். நிச்சயமாக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரது வெற்றிக்கும் பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வரவேண்டும் என்று எல்லோரும் அழைத்துவரும் நிலையில் தனிப்பட்ட முறையில் நீங்கள் விஜயகாந்தை சந்தித்து பேசினீர்களா? என்ற கேள்விக்கு எல்லா விஷயங்களையும் வெளியே சொல்ல முடியாது என்று மறுத்து விட்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →