Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth Will Leave From Vaiko’s Alliance – BJP’s H.Raja

By   /  April 2, 2016  /  Comments Off on Vijayakanth Will Leave From Vaiko’s Alliance – BJP’s H.Raja

    Print       Email

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு விஜயகாந்த் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவார் – சொல்கிறார் பாஜகவின் தேசிய hqdefault (2)செயலாளர் எச்.ராஜா.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

நாளை மறுதினம் (4–ந்தேதி) பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டு 2–வது இறுதி வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்படும். 5–ந்தேதி பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்.

4–ந்தேதி முதல் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் அ.தி.மு.க–தி.மு.க. கட்சிகளின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் பிரசாரம் செய்ய இருக்கிறேன். இதற்காக வீடியோ பிரசார வாகனம் தயார் நிலையில் உள்ளது.

அ.தி.மு.க–தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க.தான் உள்ளது. வைகோ தன்னை தூய்மையானவர் போல் பேசி வருகிறார்.

தி.மு.க. ஆட்சியின்போது இவர் மேல்சபை எம்.பி.யாக 3 முறை இருந்து இருக்கிறார். அப்போது சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல், கோதுமை பேர ஊழல் இதையெல்லாம் இவர் ஏன் பேசவில்லை?

தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினுடன் பதவிப்போட்டி ஏற்பட்டதால்தான் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

தே.மு.தி.க. ஒரு நல்ல நிலைப்பாட்டில் இல்லை. 21–ந்தேதி வேட்புமனு தாக்கலுக்கு முன்பு கூட்டணியை விட்டு விஜயகாந்த் வெளியே வந்து விடுவார்.

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஏற்றம் பெறும் வகையில் திட்டங்கள் அமைந்துள்ளன. மத்தியிலும, மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால்தான் பல்வேறு திட்டங்கள் சரியாக நடக்கும் என்பதை இந்த தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்ட இருக்கிறோம்.

தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்பு, கருத்துக்கணிப்பே அல்ல. அது கருத்து திணிப்புதான்.

தே.மு.தி.க.வின் நிலை என்ன என்பது இன்னும் 45 நாட்களில் தெரிந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →