Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  yet  to  finalise, still  in  confusion

By   /  February 16, 2016  /  Comments Off on Vijayakanth  yet  to  finalise, still  in  confusion

    Print       Email

THJVN_DMDK_FAST_6_2386258gகுழப்பத்தில் விஜயகாந்த், இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த தி.மு.க., தனது மனதை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. ஒரு அணியாகவும், மக்கள் நலக் கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காணும் நிலையில் பா.ஜனதாவும் தனிக் கூட்டணி அமைக்க ஆயத்தமாகிறது.

InCorpTaxAct
Suvidha

பா.ம.க.வும் தனித்து போட்டியிடுகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில், காங்கிரசை மட்டும் கூட்டணியில் வைத்துக் கொண்டு வெற்றிக்கோட்டை எட்ட முடியாது என்கிற எண்ணமே தி.மு.க.வினர் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. கணக்கு போட்டுள்ளது. இதற்காக விஜயகாந்துக்கு தி.மு.க.வும், காங்கிரசும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தன. இதனை ஏற்றுக்கொண்டு தி.மு.க. அணியில் விஜயகாந்த் சேர்ந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பற்றி இணைய தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன என்று சாடி இருந்தார். தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பிரேமலதாவின் இந்த கருத்தால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே தேர்தல் கூட்டணி பற்றி இனி யாரும் வாய் திறக்க வேண்டாம் என்று தே.மு.தி.க.வினருக்கு விஜயகாந்த் கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டணி தொடர்பாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கும் இது போன்ற கருத்துக்கள் கூட்டணிக்கு குந்தகம் விளைவித்து விடக்கூடாது என்பதற்காகவே விஜயகாந்த் இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை பெற்று எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் விஜயகாந்த் பெற்றார். அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் விஜயகாந்துக்கு பெரிய சறுக்கலாகவே இருந்தது.

தேர்தலின்போது வீசிய மோடி அலையை பயன்படுத்தி எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என கருதிய விஜயகாந்த் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் ஒரு இடத்தில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை.

அது போன்ற ஒரு நிலைமை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் தே.மு.தி.க.வினர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப கூட்டணி வியூகத்தை அமைக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்த்தை மீண்டும் சேர்க்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை வருகை தரும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் பேச்சு நடத்துவார் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் ஊழலுக்கு எதிராக விஜயகாந்த் கருத்து தெரிவித்து வருவதால் வைகோ தலைமையிலான மக்கள்நலக் கூட்டணியில் அவரை சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் தொடர்ந்து விஜயகாந்துடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

இதனால் யாருடன் சேருவது என்று முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் குழப்பத்தில் உள்ளார்.

காஞ்சீபுரத்தில் வருகிற 20–ந்தேதி நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றிய இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக விஜயகாந்த் அறிவிப்பார் அல்லது தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்கிற எண்ணத்தை சூசகமாக வெளிப்படுத்துவார் என்றே தே.மு.தி.க.வினர் காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →