Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Vijayakanth  yields to cadres  pressure? May join DMK- Cong alliance.

By   /  March 1, 2016  /  Comments Off on Vijayakanth  yields to cadres  pressure? May join DMK- Cong alliance.

    Print       Email

13-1439462640-vijayakanth-d-600தொண்டர்கள் விருப்பத்துக்குப் பணிகிறார் விஜயகாந்த்? திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைய இருப்பதாகத் தகவல்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், வருகிற சட்டமன்ற தேர்தலில் அக்கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

InCorpTaxAct
Suvidha

கூட்டணிக்கு தலைமை தாங்க வைத்து முதல்–அமைச்சர் வேட்பாளராகவும் அறிவித்தால் பா.ஜனதா கூட்டணியில் நீடிக்கலாம் என்கிற மன நிலைக்கு விஜயகாந்த் மாறினார். இதையடுத்தே தனது ‘கிங்’ ஆசையை அவர் வெளிப்படுத்தினார். பா.ஜனதா தலைவர்களும், விஜயகாந்தை முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயாராகவே உள்ளனர். எனவே விஜயகாந்த்தும் முதல்–அமைச்சர் கனவில், பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இதன் எதிரொலியாகவே, பா.ஜனதா மேலிட தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து விஜயகாந்தை, அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பேசினார்.
ஆனால் தே.மு.தி.க. தரப்பிலோ,  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்பட்டது.

இது பா.ஜனதா தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அவர்கள் அதனை வெளிக்காட்டி கொள்ளாமலேயே உள்ளனர்.

இதையடுத்து முடங்கி கிடந்த தே.மு.தி.க.வுடனான தி.மு.க. பேச்சு வார்த்தை மீண்டும் உயிர் பெற்றிருப்பது போல தோற்றம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்கான முயற்சிகள் பலன் அளித்து இருப்பதாகவும், தே.மு.தி.க.வுக்கு 54 இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும்பாலானோரின் விருப்பமும் இதுவாகவே இருக்கிறது. கட்சியின் நலன் கருதி, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்றே அவர்கள் விஜயகாந்திடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்று பா.ஜனதா கூட்டணிக்கு முழுக்கு போட்டு விடலாமா? என்கிற எண்ணமும் விஜயகாந்தின் மனதில் இருப்பதாக தெரிகிறது..விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →