Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

VK Sasikala’s nephew Mahadevan dies of cardiac arrest: Sasikala Seeks parole for funeral

By   /  April 15, 2017  /  Comments Off on VK Sasikala’s nephew Mahadevan dies of cardiac arrest: Sasikala Seeks parole for funeral

    Print       Email

dc-Cover-v6n239s80jv5u57cn9vp2s1eo3-20170219022315.Mediஅண்ணன் மகன் மரணம்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

 

InCorpTaxAct
Suvidha

 

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா அவரது அண்ணி இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று காலை மாரடைப்பால் இறந்தார். இவரது மரணம் குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரும்பினால் பரோலில் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறை கண்காணிப்பாளரிடம் பரோலில் செல்ல அனுமதி கேட்டு இன்று மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவர்களின் மனு மீது சிறை கண்காணிப்பாளர் என்ன முடிவு எடுத்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

201704151345447165_mahadevan._L_styvpfகர்நாடக சிறை விதிகளின் படி தண்டனை கைதிகளின் உறவினர் இறந்தால் கைதிகள் பரோலில் செல்ல அனுமதி உண்டு. ஆனால் பரோலில் செல்ல அனுமதிப்பது குறித்து சிறை கண்காணிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Prayer to protect from Corona Virus

Read More →