Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Voters  who  demand  money  for  voting  is  increasing  in  TN- says  Ex CEC.

By   /  March 12, 2016  /  Comments Off on Voters  who  demand  money  for  voting  is  increasing  in  TN- says  Ex CEC.

    Print       Email

ஓட்டுக்குப் பணம் வாங்கும் வாக்காளர்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டனர். முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் gopalaswami_30372eபேச்சு.

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகை நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடந்தது.

InCorpTaxAct
Suvidha

இதில் முன்னாள் தலைமைதேர்தல் கமிஷனர் என்.கோபால்சாமி கலந்து கொண்டு தேர்தல் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:–

‘தமிழகத்தில்தான் ஓட்டுக்கு வாக்காளர்கள் பணம் பெறுவது தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. வாக்காளர்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்குகளை அளிக்க முன் வருகிறார்கள். பணம் கிடைக்காதவர்கள் அரசியல் வாதிகளிடம் நேரடியாக சென்று பணத்தை கேட்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நான் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தபோது பீகார் மாநிலம்தான் இது போன்ற நிலையில் இருந்தது. ஆனால் இப்போது பீகார் மாநிலத்தை பார்த்து தமிழகம் திருந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

தேர்தலின்போது வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை யாருக்கு போடுவது என்று முன்பே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் 5 ஆண்டுகள் செய்த பணிகள், அவர்களது திறமை, உடல் நலம் குறித்து ஆராய்ந்து முடிவு எடுத்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →