Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Warrant for violation of the moratorium: appeal in the Supreme Court on behalf of Vijayakanth

By   /  July 28, 2016  /  Comments Off on Warrant for violation of the moratorium: appeal in the Supreme Court on behalf of Vijayakanth

    Print       Email

இடைக்கால தடையை மீறி பிடிவாரண்டு: விஜயகாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடுTHJVN_DMDK_FAST_6_2386258g

இடைக்கால தடையை மீறி திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதாகவும், அதனால் ஏற்கனவே உள்ள வழக்கை இன்று விசாரிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுப்பிரமணிய சாமி ஆகியோர் அவதூறு தொடர்பான குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனுதாரர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் கீழ் கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பு அப்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இதே போன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் வழக்கு தொடர்வது சட்ட நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல என்றும், எனவே, மனுதாரர்கள் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த், பிரேமலதா தரப்பில் கோரப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்ந்து 4 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாத விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, டெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளரும், வக்கீலுமான ஜி.எஸ்.மணி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இது மிகவும் முக்கியமான வழக்கு, எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பான வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →