Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

We are ready to answer Jaya’s questions provided we are allowed to speak in the Assembly: Says Stalin

By   /  August 23, 2016  /  Comments Off on We are ready to answer Jaya’s questions provided we are allowed to speak in the Assembly: Says Stalin

    Print       Email

mkstalin 81தகுதி, தெம்பு, திராணி, யோக்கிதை, அருகதை இருக்கா? ஜெ.வுக்கு ஸ்டாலின் பதிலடி

”சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகில் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது.

InCorpTaxAct
Suvidha

கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,

அதிமுக ஆட்சியில் நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. நீதித்துறைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காத நிலை அதிமுக ஆட்சியில் உள்ளது. சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் பொதுவானவராக செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சனை என்று வந்தபோது ஆளுங்கட்சிக்கு திமுக முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்ற தீர்மானம் வந்தபோது அதை நிறைவேற்ற ஆதரவு அளித்தோம்.

காவல்துறை மானியம் சட்டசபையில் 22ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு அதற்கு ஜெயலலிதா பதில் உரை ஆற்றப்போகிறார். பதிலுரை ஆற்றுகிறபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் அமர்ந்திருந்தால் கேள்வி கேட்பார்கள். அப்போது ஜெயலலிதாவுக்கு ஆத்திரம் வரும். ஆகவே அதனை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு திமுக உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளே இல்லாமல் காவல்துறை மானியத்தை தாக்கல் செய்து, ஒப்புக்காக ஒன்றிரண்டு பேரை பேசவைத்து ஜெயலலிதா பதிலுரை ஆற்றியிருக்கிறார். பதிலுரை ஆற்றும்போது என்ன ஆணவம், திமிறு. என்ன கர்வம், தலைவர் கலைஞரை பார்த்து கேட்கிறார். ஏன் இங்கு வந்து பேசுவதற்கு தைரியமில்லை என்று கேட்கிறார். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நீங்கள் (ஜெயலலிதா) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தீர்கள். அப்போது அவையில் தன்னந்தனியாக பேசினீர்கள். இல்லை என்று மறுக்கவில்லை. ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் பேசினீர்கள். ஆனால் ஜனநாயக முறைப்படி பேச வைத்து அழகு பார்த்தவர் கலைஞர். நீங்கள் பேசிய பேச்சு அனைத்தும் அவை குறிப்பில் இருக்கிறது.

நாங்கள் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயார். ஆனால் அவை தலைவரிடம் நாங்கள் பேசுவதற்கான உரிமையை முறையாக பெற்றுத்தரக் கூடிய தகுதி, தெம்பு, திராணி, யோக்கிதை, அருகதை முதலமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதாவுக்கு இருக்கா.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்

–அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →