Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

We do  not  want  to  interfere  in  Vijayakanth’s  decision –  says  Stalin

By   /  March 11, 2016  /  Comments Off on We do  not  want  to  interfere  in  Vijayakanth’s  decision –  says  Stalin

    Print       Email

10400204_576900979136443_581081128799712615_n‘விஜயகாந்த் உரிமையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்கிறார் ஸ்டாலின்.

தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது அக்கட்சியின் உரிமை. அவர்கள் உரிமையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், சென்னையில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

“திமுக கூட்டணிக்கு வரலாம் என்று தேமுதிகவுக்கு கருணாநிதி அழைப்பு கொடுத்திருந்தார்.

கூட்டணிக்கு வருவதாக இருந்தால் வரலாம் என்ற நல்ல எண்ணத்துடன் விடுக்கப்பட்ட அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பதெல்லாம் அவர்களுடைய உரிமை.

அவர்களுடைய உரிமையில் நாங்கள் தலையிட முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தேமுதிக உடனான கூட்டணி முயற்சி குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறும்போது, “பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி முடிவாவததில் இழுபறி எதுவும் கிடையாது. திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது” என்றது நினைவுகூரத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →