Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘We  don’t  need  Vijayakanth” – says  Durai  Murugan.

By   /  March 17, 2016  /  Comments Off on ‘We  don’t  need  Vijayakanth” – says  Durai  Murugan.

    Print       Email

எங்களுக்கு விஜயகாந்த் தேவையில்லை – துரைமுருகன் ஆவேசப் பேச்சு.maxresdefault (4)

திருப்பத்தூரில் ம.தி.மு.க. நகர செயலாளர் ரகுநாத் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரம் பேர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் துரைமுருகன் பேசியதாவது:–

InCorpTaxAct
Suvidha

தி.மு.க.வில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். ம.தி.மு.க. வில் இருந்து மட்டும் 400 பேர் வந்திருக்கிறீர்கள். இவ்வளவு பேர் அந்த கட்சியில் இருந்ததே பெரிய விஷயம்.

வேலூர் மாவட்டத்தில் 2–வது பெரிய நகரம் திருப்பத்தூர். தனி மாவட்டமாக மாற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதை பார்க்காதீர்கள். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக எண்ணி செயலாற்ற வேண்டும்.

கடந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. நேரடியாக போட்டியிடும். அதை பெற்று தருவது எனது கடமை. இந்த தொகுதியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

1971–ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அனைவரும் கனவு கண்டனர். ஆனால் 184 தொகுதிகளில் தி.மு.க. வென்றது. அதேபோல இந்த முறையும் 184 தொகுதிகளில் தி.மு.க. வெல்லும்.

விஜயகாந்த் எங்களுக்கு தேவை இல்லை. தி.மு.க. கப்பில் இருக்கும் ஐஸ்கிரீம் போன்றது. விஜயகாந்த் அதில் இருக்கும் செர்ரி பழத்தை போன்றவர்.

ஐஸ்கிரீமை தான் விரும்பி சாப்பிடுவார்கள். செர்ரி பழத்தை தூக்கி எரிந்து விடுவார்கள். மீண்டும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →