கூட்டணி விஷயத்தில் விஜயகாந்தும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நல்ல முடிவு கிட்டும் – ஸ்டாலின் கருத்து.
திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கருணாநிதி அழைப்பை ஏற்று விஜயகாந்த் பேச்சுவார்த்தைக்கு வந்தால் கூட்டணி விவகாரத்தில் நல்ல முடிவு கிட்டும் என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானதை தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “தமிழக தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இருப்பினும் இந்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு குறித்து எந்த பேச்சும் நடைபெறவில்லை. புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டாக தேர்தலை எதிர்கொள்ளும். கூட்டணிக்கு மற்ற கட்சிகள் வந்தால் வரவேற்கிறோம். ஏற்கெனவே தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று விஜயகாந்த் பேச்சுவார்த்தைக்கு வந்தால் கூட்டணி விவகாரத்தில் நல்ல முடிவு கிட்டும்” என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.