Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

We had alliance with BJP and wasted 25 years – Says Shiv Sena

By   /  July 27, 2016  /  Comments Off on We had alliance with BJP and wasted 25 years – Says Shiv Sena

    Print       Email

286628-uddhav-700பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்- சிவசேனா கூறுகிறது.

மராட்டியத்தில் முக்கிய கட்சியாக உள்ள சிவசேனா பாரதிய ஜனதாவுடன் நீண்டகாலமாக கூட்டணியில் உள்ளது. மத்திய அரசில் சிவசேனா எம்.பி.க்களும் மந்திரிகளாக உள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

ஆனால் சமீபகாலமாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது அவரது கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

சிவசேனா கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் ஆகியது. இதில் 25 ஆண்டுகள் நாம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்து வருகிறோம். ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம் என நான் கருதுகிறேன்.

இந்த 25 ஆண்டில் நாம் அவர்களுடன் கைகோர்த்து அவர்களை வளரச் செய்தோம். ஆனால் நமக்கு எந்த பலனும் இல்லை. இத்தனை ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்து இப்போது அது அழுக தொடங்கிவிட்டது.

அவர்களுடன் கூட்டணியில் இருப்பதால் தேவையில்லாமல் நமக்குத்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் எனக்கோ அல்லது நமது கட்சிக்கோ உரிய மரியாதை வழங்கவில்லை. நாம் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் அவர்களை மிரட்டி நிர்பந்தப்படுத்தவில்லை.

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சிக்கு புதியவர் என்பதால் அவருடன் விருந்தில் கலந்து கொண்டேன். அவரை நான் தீவிரமாக கண்காணித்து வருகிறேன். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →