Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘We  have  doubts in kalabhavan  Mani’s  death’ – says his Brother.

By   /  March 18, 2016  /  Comments Off on ‘We  have  doubts in kalabhavan  Mani’s  death’ – says his Brother.

    Print       Email

Kalabhavan-mani‘எங்கள் அண்ணனின் சாவில் மர்மம் உள்ளது’- கலாபவன் மணி மரணம் குறித்து அவரது சகோதரர் பேட்டி.

நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.   அவரது உடலில் ‘மெத்தனால்’ என்ற போதை அளிக்கும் ரசாயனம் அதிகளவில் இருந்தது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் இதுபற்றி போலீசுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் கொடுத்தது.

InCorpTaxAct
Suvidha

இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கலாபவன்மணியின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக காக்கநாட்டில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

கலாபவன்மணியின் மரணத்திற்கு அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே சமயம் ரசாயன பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு தான் கலாபவன்மணியின் மரணத்திற்கான காரணம் துல்லியமாக தெரிய வரும்.

கலாபவன்மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் ஏற்கனவே கலாபவன்மணியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது சாவில் உள்ள மர்மங்களை போலீசார் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் மீண்டும் இதே புகாரை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கலாபவன்மணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்ததும் பதறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது டாக்டர்கள் கலாபவன்மணி உடலில் அளவுக்கு அதிகமாக ‘மெத்தனால்’ கலந்திருப்பதாக தெரிவித்தனர்.

கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் நடிகர்கள் ஜாபர், ஷாபு உள்பட 6 பேர் கலந்துகொண்டு உள்ளனர். அவர்களில் கலாபவன் மணியை தவிர மற்ற யாருடைய உடலிலும் ‘மெத்தனால்’ கலக்கவில்லை. ஆனால் கலாபவன்மணியின் உடலில் மட்டும் ‘மெத்தனால்’ எப்படி கலந்தது? இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

போலீசார் என்னிடம் விசாரித்தபோது இந்த சந்தேகத்தை அவர்களிடம் தெரிவித்திருந்தேன். மேலும் கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் போலீசார் விசாரணை நடத்த சென்ற போது அங்கு மது விருந்து நடந்ததற்கான தடயங்கள் அழிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த தடயங்களை அழிக்க வேண்டிய அவசியம் என்ன?

மேலும் கலாபவன்மணி பண்ணை வீட்டில் மது அருந்தியபோது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரது உதவியாளர்கள் 3 பேர் ஒரு நர்சை அழைத்து வந்து கலாபவன்மணிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது கலாபவன் மணிக்கு அந்த நர்ஸ் ஊசி போட்டுள்ளார். இதனால் கலாபவன்மணிக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவரை காரில் ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். எனவே அந்த உதவியாளர்களிடம் போலீசார் விசாரித்தால் கலாபவன் மணியின் சாவில் உள்ள மர்மங்கள் வெளியாகும்.

மது விருந்தில் பங்கேற்ற நடிகர் ஜாபர் தான் ஒரு பீர் மட்டும் குடித்ததாக கூறி உள்ளார். நடிகர் ஷாபு தான் மது குடிக்கவில்லை என்று கூறி உள்ளார். ஆனால் ஷாபு மது குடித்துவிட்டு கார் ஓட்டமுடியாத அளவுக்கு போதையில் இருந்துள்ளார். இதனால் தனது கார் டிரைவரை அழைத்து நடிகர் ஷாபுவை திருவனந்தபுரத்தில் விட்டு வரும்படி கலாபவன் மணி கூறி உள்ளார். எனவே இதிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். நடிகர் கலாபவன்மணியின் உதவியாளர்கள் அருண், பிஜின், முருகன் ஆகியோரை அதிரடியாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் மது விருந்தின் போது நடந்தது என்ன? மது விருந்தின் தடயங்கள் அழிக்கப்பட்டது ஏன்? கலாபவன் மணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தது ஏன்? என்பது உள்பட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் நடிகர்கள் ஜாபர், ஷாபு ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →