Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

We  need  victory : But  it is not possible  always – says  Kohli.

By   /  March 26, 2016  /  Comments Off on We  need  victory : But  it is not possible  always – says  Kohli.

    Print       Email

Virat Kohli Wallpapers (2)வெற்றிபெறுவது விரும்பத் தக்கதுதான். ஆனால் எப்போதுமே வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கமுடியாது – கோலி பேட்டி.

அவர் சனிக்கிழமையன்று இது குறித்து கூறியதாவது:

InCorpTaxAct
Suvidha

வங்கதேசத்துக்கு எதிராக அந்த வெற்றியைப் பெற்றது நன்மை பயப்பதாகும். கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் சீரான முறையில் ஆடுவது என்பது கடினம், இந்த உண்மையுடன் நாம் உடன்பட்டு எதிர்கொள்வது அவசியம். சில சூழ்நிலைகளில் அசாத்திய துணிச்சல் குணம் வேண்டும், இங்குதான் நமது ஸ்பின்னர்கள், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அபாரமாக திகழ்கின்றனர்.

இந்த டி20 வடிவத்தில் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்திலும் கவனம் தேவை. எனவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நின்று நிலைக்க வேண்டும், அதீதமாகச் செயல்பட்டு விடக்கூடாது.

எப்போதும் திருப்தியளிக்கும் வகையில் வெற்றி பெறுவது விரும்பத்தக்கதுதான் ஆனால் அனைத்து போட்டிகளிலும் இது சாத்தியமில்லை. சில வேளைகளில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும், கடந்த 2 போட்டிகளைப் போல. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியைப் பொறுத்த மட்டில் அங்கு அவர்களை 3-0 என்று வீழ்த்தியதிலிருந்து சாதக அம்சங்களைத் திரட்டிக் கொள்ளலாம், ஆனால் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது. ஏனெனில் நாளைய போட்டி காலிறுதிக்குச் சமமானது. நாம் ஏன் அவர்களை வீழ்த்தினோம் என்ற நினைவு முக்கியமே தவிர முடிவை மட்டுமே சிந்திப்பதல்ல. நாம் நமது ஆற்றலுக்கேற்ப ஆடினால் மீண்டும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம்.

ஒரு கிரிக்கெட் வீரராக மிகநீண்டகாலம் ஆடிக் கொண்டே இருக்க முடியாது. எனக்கு இது ஒரு வாய்ப்பு. நன்றாக ஆடுவது என்ற பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் அது மேலும் மேலும் வேண்டும் என்று விரும்புவோம்.

உலகக்கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் நன்றாக ஆடும் எந்த ஒருவீரரின் தன்னம்பிக்கையையும் அசைக்க முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டுள்ளேன். 2011-ல் இருநாட்டு பிரதமர்களும் மைதானத்தில் இருந்தனர், பெரிய சூழலில் ஆட்டம் மீதான கவனம் தவறுவது இயற்கையானது. எனவே அந்தத் தருணத்தில் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது, பிறகு கொண்டாடுவது என்பதே நான் கற்றுக் கொண்ட விஷயம்.

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி குறித்து…

கடைசி ஓவர் போன்ற சூழ்நிலைகளில் அனுபவமே கை கொடுக்கும். தோனி பெரிய போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார், அதனால் அவரது உறுதிப்பாடு அவருக்கு காலப்போக்கில் ஏற்பட்டதாகும். அவர் நிதானமானவர், அமைதியானவர் என்பதை நாம் அறிவோம். நான் எல்லைக்கோட்டருகே இருந்த போத் ஆஷிஷ் நெஹ்ரா அவரிடம் பேசினார். தோனிக்கு அவரிடமிருந்து நல்ல அறிவுரை கிடைத்தது. இது ஆட்டத்தின் முக்கியமான தருணமாகும்.

தோனி பந்தை த்ரோ செய்யவில்லை, ஓடி வந்து அடித்தார், இது அவருடைய சமயோசிதத்துக்கு அருமையான உதாரணம்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் முக்கியமான வீரர், அவர் அந்த அணிக்கு அடித்தளமாக விளங்குகிறார். பெரிய வீரர்களை விரைவில் வீழ்த்துவது அவசியம்.

இவ்வாறு கூறினார் கோலி.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →