Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

We  were  reluctant to  accept  Vijayakanth  as  CM  candidate – tells  senior  BJP leader Ela.ganeshan

By   /  March 24, 2016  /  Comments Off on We  were  reluctant to  accept  Vijayakanth  as  CM  candidate – tells  senior  BJP leader Ela.ganeshan

    Print       Email

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்வதில் எங்களுக்குத் தயக்கம் இருந்தது- பாஜக கூட்டணி ஏற்படாதது 09THEFGANESAN_2237209g குறித்து இல.கணேசன்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

டெல்லியில் இருந்து ஜவடேகர் வந்து உள்ளார். வேட்பாளர் தேர்வு பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும். பா.ஜனதா கட்சியும் இதர சில கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கும் அந்த கட்சிகள் பற்றிய விவரங்களை ஜவடேகர் அறிவிப்பார்.

பா.ஜனதா கூட்டணி முயற்சிகளை முன்கூட்டியே துவக்கியதும் உண்மை. தொடர்ந்து முயற்சித்ததும் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அந்த மாதிரி உணர்வுகளோடு விஜயகாந்த் சென்று இருக்கலாம். எங்களோடும் கடைசி வரை வருகிறேன் என்றுதான் சொல்லி வந்தார். முதல்–அமைச்சர் வேட்பாளராக அவரை நாங்கள் ஏற்கவில்லை என்பதை விட அதற்கு தயங்கினோம் என்பது தான் உண்மை. பா.ஜனதாவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்ற நிலைபாட்டை எடுத்து இருந்தோம்.

விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததால் ‘மக்கள் நலனை’ அந்த கூட்டணி முதல் பலி கொடுத்துள்ளது. மக்கள் நலக்கூட்டணி ‘விஜயகாந்த் நலக்கூட்டணியாக மாறி இருக்கிறது.

பா.ஜனதா கட்சி தனித்து விடப்படவில்லை. இது தனித்துவம் வாய்ந்த கட்சி. மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்பையும், தங்கள் நலனையும் கருதி முடிவெடுக்கும். ஆனால் நாங்கள் மக்கள் நலன் கருதி முடிவெடுப்போம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்றது நல்லதுதான். எங்காவது ஒரு இடத்தில் ‘செட்’டில் ஆக வேண்டுமல்லவா? அவர் வந்தது பற்றி எதிர்பார்ப்பும் இல்லை. போனது பற்றி வருத்தமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →