திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரின் தோள்களை எங்கள் வெறும் கைகளாலேயே துண்டாக்கிவிடுவோம் –மாநில பாஜக தலைவரின் வெறிப்பேச்சு.
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு கட்சி தொண்டர்கள் இடையே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நடிகை ரூபா கங்குலி பா.ஜ.க.-வில் இணைந்து சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் மோசமான தோல்வியை தழுவினார். இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பாஜக தொண்டரை நலம் விசாரித்துவிட்டு கொல்கத்தா திரும்பிக்கொண்டிருந்த ரூபா கங்குலி தாக்கப்பட்டார்.
இதேபோல், பல்வேறு இடங்களில் பா.ஜ.க., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களும் புகார்கள் அளித்துள்ளனர்.
இந்நிலையில், வெறும் கைகளால் தோள்களை துண்டாக்கி விடுவோம் என்று திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை மேற்கு வங்க மாநில பா.ஜ.க. எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், பா.ஜ.க.வினர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வெறும் கைகளால் சண்டை போடும் பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.